இரத்தத்தில் எழுதிய ஒப்பந்தம்... சகோதரிகளை பலி கொடுத்த இளைஞர்: வெளிவரும் பகீர் பின்னணி
பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிய சகோதரிகள் இருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த இந்த கொலை தொடர்பில் கைதாகியுள்ள தன்யல் ஹுசைன் என்ற இளைஞர், அந்த சகோதரிகளை பலி கொடுத்தது அம்பலமாகியுள்ளது.
46 வயதான Bibaa Henry மற்றும் 27 வயதான Nicole Smallman ஆகிய இருவருமே Wembley பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டனர்.
சம்பவத்தன்று Bibaa Henry-ன் பிறந்தநாளை பூங்காவில் வைத்து இருவரும் கொண்டாடியுள்ளனர். இந்த நிலையிலேயே தன்யல் ஹுசைன் கத்தியால் தாக்கி இருவரையும் கொன்றுள்ளார்.
ஓராண்டு நீண்ட விசாரணைக்கு பின்னர் கைதாகியுள்ள தன்யல் ஹுசைன், சாத்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவே இருவரையும் பலி கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி லொட்டறில் பெருந்தொகை வெல்லும் பொருட்டு, தனது இரத்தத்தால் எழுதி சாத்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். மேலும், இதற்காக ரத்த பலி அளிப்பதாகவும் உறுதி செய்துள்ளார்.
இதே இளைஞர் தமது பள்ளி நாட்களில் தமக்கு காதலி வாய்க்க, ரத்தம் சிந்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், இதுவரையான விசாரணையில் தாம் திட்டமிட்டு இந்த கொலைகளை செய்யவில்லை எனவும், சாத்தானுடனான ஒப்பந்தம் காரணமாகவே பலி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற விசாரணை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என்றே கூறப்படுகிறது.