விளையாடிவிட்டு வந்ததும் குளிர்ந்த நீரை பருகிய சிறுவன்..மயங்கி விழுந்து மரணம்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுவன் விளையாடிவிட்டு வந்ததும் நீரை பருகி நிலையில், உடனடியாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்
உத்தர பிரதேச மாநிலம் ஹஸன்பூர் அருகே உள்ள காயஸ்தான் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் பிரின்ஸ் சைனி (17). 10ஆம் வகுப்பு படித்து வந்த இவர், நேற்றைய தினம் பள்ளி விடுமுறையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சைனி நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி முடித்ததும் சைனி குளிர்ந்த நீரை பருகியுள்ளார்.
Photo: Twentyfournews.com
விசாரணை
அதன் பின்னர் அவர் சட்டென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனித்த அருகில் இருந்த நபர்கள், சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சைனியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளனர். இதற்கிடையில் சிறுவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |