சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர்

Crime Sydney
By Arbin Jul 02, 2024 07:31 AM GMT
Report

சிட்னி பல்கலைக்கழகத்தில் கத்தியால் தாக்கிய 14 வயது சிறுவனை கைது செய்ததாக அவுஸ்திரேலிய பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிருக்கு ஆபத்தில்லை

குறித்த சம்பவத்தை அடுத்து சிட்னி பல்கலைக்கழக வளாகம் மொத்தமாக மூடப்பட்டுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த அவசர மருத்துவ உதவுக் குழுவினர் 22 வயது இளைஞர் ஒருவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர் | Teenage Boy Stabbing University Of Sydney

அவரது நிலை கவலைக்கிடம் என்றாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாண காவல்துறை அறிக்கை ஒன்றில் விளக்கமளித்துள்ளது.

தாக்குதலை அடுத்து, அந்த சிறுவன் பேருந்து ஒன்றில் தப்பியதாகவும், ஆனால் மருத்துவமனை ஒன்றின் அருகாமையில், பொலிசாரால் கைதாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, அப்பகுதி மக்களுக்கு இச்சம்பவத்தால் அச்சுறுத்தல் இல்லை என்றும், தாக்கிய சிறுவனும் தாக்கப்பட்டவருக்கும் தொடர்பில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வளாகம் மூடப்பட்டிருக்கும்

நடந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் பொலிசார் விசாரித்து வருவதாகவும், வளாகம் அதுவரை மூடப்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சிட்னி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவனின் வெறிச்செயல்: ஆபத்தான நிலையில் ஒருவர் | Teenage Boy Stabbing University Of Sydney

சிட்னியின் போண்டி பகுதியில் உள்ள கடற்கரையோர வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு 12 பேர் காயமடைந்து சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மேலும், சிட்னியின் மேற்கில் அசிரிய தேவாலய பிஷப் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்தார். இந்த விவகாரத்தில் 16 வயது சிறுவன் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நிலையில், வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல்தாரி பொலிசாரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US