பிரித்தானியாவில் நாயுடன் வாக்கிங் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் தனது நாயுடன் நடந்து சென்ற 17 வயது சிறுமியை அடையாளம் தெரியாத இருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரில் பிளாக்லி பகுதியில் உள்ள Boggart Hole Clough பூங்காவில், ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் கூறியதாவது, Moston Lane பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் தனது வளர்ப்பு நாயுடன், இரவு 7 மணியளவில் தனது வீட்டிலிருந்து பூங்காவிற்கு வாக்கிங் சென்றுள்ளார்.
அவர் Duck Pond-ல் இருந்து Charlestown Road exit-ஐ நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்கள் அவரை அணுகியுள்ளனர்.
அதில் ஒருவர் சிறுமியின் நாயை பிடிங்கிக்கொள்ள, மற்றோருவர் சிறுமியை தாக்கி, கீழே தள்ளிவிட்டு துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது நாயை எடுத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து தப்பித்து ஓடினார். பிறகு பூங்காவில் இருந்த வேறு இரண்டு பெண்களை அவர் எச்சரித்தார்.
அவர்கள் உடனடியாக பொலிசுக்கு தொடர்பு கொண்டனர். தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பை ஓடிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பொலிஸார் தாக்குதல் நடத்திய இருவரன் அடையாள குறிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
ஒருவர் சடை முடி கொண்ட கறுப்பின ஆண் என்றும் அவரது உயரம் 5 அடி 8 அங்குலம் இருக்கலாம், மேலும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆப்பிரிக்க உச்சரிப்புடன் பேசுபவர் என விவரிக்கப்பட்டுள்ளது. அவர் ராயல் ப்ளூ ஸ்லீவ்ஸுடன் அடர் நிற பஃபர் ஜாக்கெட், பெல்ட் கொண்ட டார்க் ஜீன்ஸ் மற்றும் dark trainersஷூஸ் அணிந்திருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றோருவர், ஒரு வழுக்கை தலை வெள்ளை ஆண், 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர், குறுகிய தாடி மற்றும் மான்செஸ்டர் உச்சரிப்பில் பேசக்கூடியவர். அவர் long-sleeved V நெக் டீ-ஷர்ட், வெள்ளை நிற ட்ரெயினர் ஷூ மற்றும் டார்க் நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார் என விவரிக்கப்பட்டுள்ளது.
GMP பொலிஸார் கூறுகையில், "நாங்கள் அந்த இடத்தை கவனமாக ஆராய்ந்து வருகிறோம், மேலும் அந்த பகுதியில் எங்கள் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்போம், எனவே யாருக்காவது கவலை இருந்தால், அவர்கள் நேரடியாக எங்கள் அதிகாரிகளை அணுகலாம்."
மேலும் "சம்பவ நேரத்தில் அந்த பகுதியில் நடந்துகொண்டிருந்தவர்கள் யாரேனும் இருந்தால், பொலிஸில் வந்து பேசும்படி நான் வேண்டுகோள் விடுக்கிறேன். எந்த தகவலும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எங்கள் விசாரணைக்கு இன்றியமையாததாக இருக்கும்." என தெரிவித்துள்ளனர்.

