ஆணாக மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளம்பெண்: அவரது இன்றைய பரிதாப நிலை
ஆணாக மாற ஆசைப்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண். ஆனால், கடுமையான உடல் பாதிப்புக்கு உள்ளாகி, இன்று தான் படும் கஷ்டங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயற்சி செய்துகொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
ஆணாக மாற ஆசைப்பட்ட இளம்பெண்
ஸ்கொட்லாந்திலுள்ள Glasgowவைச் சேர்ந்தவர் Sinéad Watson (30). தனது 20ஆவது வயதில், தொடர்ந்து பலமுறை ஆண்களால் சீரழிக்கப்பட்டார் Sinéad. தான் அழகான பெண்ணால் இருப்பதால்தானே இந்த பிரச்சினை என்று எண்ணிய Sinéad, ஆணாக மாற முடிவு செய்து, அதற்கான மருத்துவமனை ஒன்றிற்குச் செல்ல, 23 வயதில், அவரது விருப்பப்படியே அறுவை சிகிச்சை செய்து அவரது மார்பகங்களை அகற்றி, ஆண் ஹார்மோன்களைக் கொடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
testosteroneCredit: Andrew Barr
அறுவை சிகிச்சை முடிந்து, மயக்கம் தெளிந்து எழும்போது, தான் ஒரு கம்பீரமான ஆணாக, சந்தோஷத்துடன் இருப்பேன் என கர்ப்பனை செய்துகொண்டிருந்தார் Sinéad. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும், அவரது மார்பகங்கள் அகற்றப்பட்டு உடலில் சில மாற்றங்களும் செய்யப்பட்டிருந்ததேயொழிய, அவரால் ஒரு ஆணாக உணரமுடியவில்லை.
ஆண் ஹார்மோன்கள் எடுத்து, மீசையும் தாடியும் வளர்ந்து, குரல் மாறியதேயொழிய, தன்னால் ஒரு முழுமையான ஆணாக மாறமுடியவில்லை என்பதை உணர்ந்துகொண்ட Sinéadக்கு கடும் கோபம் வந்துள்ளது. தற்கொலை எண்ணங்கள் மேலோங்க, ஏற்கனவே குடும்பத்தினருக்குக் கொடுத்த தொல்லைகள் போதும் என்பதை உணர்ந்து தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கிறார் அவர்.
மீண்டும் பெண்ணாக...
ஆகவே, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் பெண்ணாக மாற முடிவு செய்து, ஆண் ஹார்மோன்கள் உட்கொள்வதை நிறுத்தியுள்ளார் Sinéad. ஆனால், அறுவை சிகிச்சை மூலம் அகற்றபட்ட மார்பகங்கள் போனது போனதுதான், இனி அதை மாற்றமுடியாது என்பதை உணர்ந்துகொள்ள, மார்பகங்கள் அகற்றப்பட்ட வடுவைப்பார்க்கும்போதெல்லாம் மனது வலிப்பதாக கூறுகிறார் Sinéad.
Credit: Andrew Barr
நிரந்தர வலியும், ஆண் ஹார்மோன்கள் எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட பாதிப்புகளும் தினமும் கஷ்டப்படுத்த, தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை மீது கோபத்தைக் காட்டுகிறார் Sinéad.
நான் ஆண்களால் சீரழிக்கப்பட்டு மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர்கள் எனக்கு மன நல ஆலோசனை அளித்திருக்கவேண்டும். ஆனால் அவர்களோ கொஞ்சமும் யோசிக்காமல் எனக்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டார்கள் என்று கூறும் Sinéad, பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பும் இளம் தலைமுறைக்காக வருந்துகிறார்.
Credit: Andrew Barr
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தான் அனுபவித்த கஷ்டங்களிலிருந்து விடுபட்டுவரும் Sinéadக்கு, அரசின் உதவித்தொகையும், தங்க இடமும் கிடைத்துள்ளதுடன், ஏற்கனவே கஸ்டமர் சர்வீஸில்பணியாற்றிய அனுபவமும் உள்ளதால், இனி எப்படியாவது சமாளித்துக்கொள்வேன் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |