வாரிசுக்கு ஆசைப்பட்ட 2வது கணவர்..மகள்களை பலிக்கடாவாக்கிய தாய்..அம்பலமான உண்மை
இந்திய மாநிலம் ஆந்திராவில் தனது இரண்டு மகள்களையும், தாயே இரண்டாவது கணவரை வைத்து வன்புணர்வு செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
இரண்டாம் திருமணம்
ஆந்திராவின் ஏலூரைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார். 2007ஆம் ஆண்டில் கணவரை இழந்த குறித்த பெண், தனது தாய்மாமன் சதீஷ்குமாரை (43) இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் சதீஷ்குமார் தனக்கு வாரிசு வேண்டும் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். ஆனால் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டதால் தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என குறித்த பெண் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டதும் வேறு பெண்ணை திருமணம் செய்துகொள்வேன் என சதீஷ்குமார் அவரை மிரட்டியுள்ளார்.
தாயின் விபரீத முடிவு
இதனால் பதறிப்போன அப்பெண் விபரீத யோசனை ஒன்றை கூறினார். 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மூத்த மகள் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மூத்த மகளை சதீஷ்குமார் பாலியல் வன்புணர்வு செய்தில் அவர் கர்ப்பமாகியுள்ளார். ஆனால் கர்ப்பத்தை கலைத்துள்ளனர். அதன் பின்னர் மீண்டும் அச்சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் சதீஷ்குமார்.
இதனால் குறித்த சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். ஆனால் சதீஷ்குமாரோ தனக்கு ஆண் குழந்தை தான் வேண்டும் எனக் கூறி மனைவியிடம் அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது இரண்டாவது மகளையும் சதீஷிடம் ஒப்படைத்துள்ளார் அந்த கொடூர தாய்.
STUFF
குறித்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கர்ப்பமானதில் குழந்தை இறந்தே பிறந்தது. அதனை கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர்.
போக்ஸோவில் கைது
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு பொலிசாரிடம் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் குறித்த பெண்ணின் மூத்த மகள் மீண்டும் கர்ப்பம் ஆன நிலையில், சதீஷ்குமார் மீது மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியே புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் சதீஷ்குமாரை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர். மேலும் சிறுமிகளின் தாயும் கைது செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |