இடைவிடாத பாலியல் துன்புறுத்தல்... கடுமையான முடிவை எடுத்த பிரித்தானிய இளம் ராணுவ வீரர்
தனது மேலதிகாரியால் இடைவிடாத பாலியல் துன்புறுத்தலுக்கு இலக்கான அழகான இளம் ராணுவ வீரர் ஒருவர், இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இடைவிடாது துன்புறுத்தப்பட்டுள்ளது
பிரித்தானியாவின் Wiltshire பகுதியில் அமைந்துள்ள Larkhill முகாமில் 2021 டிசம்பர் மாதம் 19 வயதேயான Jaysley Beck சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ராணுவ தரப்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தனது மேலதிகாரியால் இடைவிடாது துன்புறுத்தப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்தது.
Credit: Facebook
சட்ட காரணங்களுக்காக அந்த மேலதிகாரி யார் என்பதை வெளியிடவில்லை. தமது மேலதிகாரி தொடர்பில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடன் குறிப்பிட்ட ஜேஸ்லி பெக், தொடக்கத்தில் அவரை ஒரு நண்பராக பாவிக்க முயன்றதாகவும், ஆனால் அவரது நடத்தை தாங்க முடியாததாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.
2021 அக்டோபரில் மட்டும் அந்த அதிகாரி 1,000க்கும் மேற்பட்ட WhatsApp குறுத்தகவல்கள் மற்றும் குரல் அஞ்சல்களை ஜேஸ்லிக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் அடுத்தடுத்த மாதங்களில் இந்த குறுந்தகவல் எண்ணிக்கை 3,500 கடந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக
உண்மையில் அந்த அதிகாரிக்கு ஜேஸ்லியை சொந்தமாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனால் ஜேஸ்லிக்கு ஒரு காதலன் இருந்துள்ளார். கும்பிரியா பகுதியை சேர்ந்த ஜேஸ்லி தமது 16வது வயதில் ராணுவத்தில் சேர்ந்துள்ளார்.
Credit: Facebook
அவர் தற்கொலை செய்துகொள்வதற்கும் ஒருவாரம் முன்னர், மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமது தந்தையின் உதவியை நாடிய ஜேஸ்லி, நண்பர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முடிவாக தமது மேலதிகாரியை தொடர்பு கொண்ட ஜேஸ்லி, உங்கள் நடத்தையால் மிகுந்த துன்பத்துக்கு உள்ளானதாகவும், தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன் பின்னர் ஜேஸ்லி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |