வாகன மோதல் விபத்தில் பலியான 70 வயது மூதாட்டி: 18 வயது இளைஞர் கைது
புத்தாண்டு தினத்தன்று பைஸ்லியில்(Paisley) நடைபெற்ற மோதல் கொலை சம்பவம் தொடர்பாக 18 வயதான ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், 70 வயதான எலிசபெத் கென்னடி(Elizabeth Kennedy) உயிரிழந்தார்.
பார்ஹெட்(Barrhead) சாலையில் லேடிகிர்க் கிரசண்ட்(Ladykirk Crescent) சந்திப்புக்கு அருகில் நடந்த வாகனம் மோதல் சம்பவத்தில் அவர் உயிரிழந்தார்.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கென்னடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, துணை ஆய்வாளர் Jan MacColl, கென்னடியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்து, "இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எலிசபெத் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடரும் நிலையில், அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து ஆதரவளிப்பார்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மோதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 வயதான இளைஞர் மேலதிக விசாரணைக்காக விடுவிக்கப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |