பிரித்தானியாவில் புகைப்படம் எடுக்க போய் 60 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்! பின் நடந்தது என்ன?
பிரித்தானியாவின் டார்செட் பகுதியில் 60 அடி உயர குன்றிலிருந்து விழுந்த பதின்பருவ சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆபத்தான புகைப்படம்
பிரித்தானியாவின் டார்செட்(Dorset) பகுதியில் உள்ள ஓல்ட் ஹாரி ராக்ஸ்(Old Harry Rocks ) என்ற இடத்தில் நண்பருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பதின்பருவ சிறுவன் ஒருவன் 60 அடி ஆழக் குன்றிலிருந்து கீழே விழுந்தார்.
இது பெரும் விபத்து என்றே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறுவன் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் இல்லாமல் உயிர் தப்பினார்.
அவசர கால நடவடிக்கை
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் கடற்கரை காவல் படை, கப்பல், காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் உட்பட அவசர கால சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
“சிறுவன் புகைப்படம் எடுப்பதற்காக விளிம்புக்கு அருகில் சென்றதாகவும் அவரது நண்பர்கள் அவர் விழுவதை கண்டதாகவும்" ஸ்வானேஜ் கடற்கரை காவல் படை நிலைய அதிகாரி இயன் பிரவுன்(Ian Brown,) விளக்கினார்.
"பாதுகாப்பு கருதி கரையோரத்தில் இருந்து விலகி இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தும் இந்த நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |