பிரித்தானியாவில் பொதுமக்களை நடுங்க வைத்த சம்பவம்: சிறுவனும் சிறுமியும் கைது
பிரித்தானியாவில் வாரிங்டன் பகுதியில் பூங்கா ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட 16 வயது இளம்பெண் தொடர்பில் 15 வயது இளைஞர்கள் இருவர் கைதாகியுள்ளனர்.
பொலிசாருக்கு தகவல்
வாரிங்டன் பகுதியில் அமைந்துள்ள Linear பூங்காவில் Brianna Ghey என்பவரின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 3.15 மணியளவில் பொதுமக்களில் சிலர் இச்சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
@Liverpool Echo
இந்த நிலையில் சம்பவப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர், Brianna Ghey மரணமடைந்துள்ளதை உறுதி செய்தனர். தர்போது இந்த வழக்கு தொடர்பாக 15 வயது இளையோர் இருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், விசாரணை முடியும் மட்டும் காவலில் வைக்கப்படுவார்கள் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன ரீதியான தாக்குதல்
16 வயதேயான Brianna Ghey இன ரீதியான தாக்குதலுக்கு இலக்கானதாக தாங்கள் நம்பவில்லை என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சில நபர்களை விசாரிக்க வேண்டும் எனவும், அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
@Liverpool Echo
சம்பவம் நடந்த Culcheth பகுதியில் ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிஸ் தரப்பு கேட்டுக்கொண்டுள்ளது.