டீனேஜ் மகளை தினமும் 3000 முறை ஸ்கிப்பிங் குதிக்க வைத்து சித்ரவதை செய்த கொடூர தாய்! இறுதியில் நேர்ந்த நிலை
சீனாவில் தனது மகள் உயரமாக வளர வேண்டும் என்பதற்காக தினமும் 3000 முறை ஸ்கிப்பிங் செய்ய வைத்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜென்ஜியாங் மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகள் மற்றவர்களை போல உயரமாக வளர வேண்டும் என்பதற்காக தினமும் 3000 முறை ஸ்கிப்பிங் குதிக்கும்படி கூறியுள்ளார்.
அந்த சிறுமியும் தாயாருக்கு பயந்து 3000 முறை ஸ்கிப்பிங் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து சிறுமி தனக்கு முழங்கால் வலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அந்த தாய் மகள் கூறுவதை எதையும் காதில் வாங்காமல் மீண்டும் உடற்பயிற்சி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
தொடக்கத்தில் 1000 முறை ஸ்கிப்பிங் செய்ய சொன்ன நிலையில் அது நாளடைவில் 3000 முறையாக உயர்ந்துள்ளது. இந்த சித்திரவதையை அந்த பெண் மூன்று மாதங்கள் தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளார். ஒரு நாள் சிறுமிக்கு நடக்க முடியாமல் போனது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த தாய் தனது மகளை மருத்துவரிடம் அழைத்து சென்றுள்ளார். மருத்துவர் சிறுமியை பரிசோதனை செய்த பிறகு அவருக்கு இழுவை அப்போபிசிடிஸ் பாதிப்பு இருப்பதாக கூறினார்.
மேலும் அளவுக்கு அதிகமாக ஸ்கிப்பிங் மேற்கொண்டதது தான் இந்த பாதிப்புக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.   
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        