பட்டப்பகலில் லண்டன் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்... இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
மேற்கு லண்டனில் சிறுவன் ஒருவரை கொள்ளையிட்டு, கத்தியால் தாக்கி, பின்னர் கால்வாயில் தள்ளி மரணத்திற்கு காரணமான இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கால்வாயில் தள்ளப்பட்டான்
மேற்கு லண்டனில் ஆஸ்திரேலியா சாலையை சேர்ந்த 18 வயதான Elijah Gookol-Mely என்பவருகே வெள்ளிக்கிழமை ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி பட்டப்பகலில் North Acton பகுதியை சேர்ந்த 17 வயதேயான Victor Lee என்ற சிறுவன் கொள்ளை சம்பவத்திற்கு இலக்கானதுடன், கத்தியால் தாக்கப்பட்டு, பின்னர் கால்வாயில் தள்ளப்பட்டான்.
ஆனால் அப்பகுதியில் கடந்து சென்ற நபர்களால் காப்பாற்றப்பட்டு, அவசர மருத்துவ உதவிக் குழுக்களால் முதலுதவி அளித்த போதும், விக்டர் லீ சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளான்.
இதனையடுத்து பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், இந்த கொடூர தாக்குதலின் பின்னணியில் கொள்ளை சம்பவம் மட்டுமே இலக்காக இருந்துள்ளது என கண்டறிந்தனர்.
விக்டரின் பைக் மற்றும் அவரது முதுகுப்பை கொள்ளை போனது பொலிசாரால் உறுதி செய்யப்பட்டது. மேலும், கன்காணிப்பு கமெரா பதிவுகள் மற்றும் மொபைல் தரவுகளின் அடிப்படையில் பொலிசார் 18 வயதான Elijah Gookol-Mely என்பவரை கைது செய்தனர்.
விக்டர் இல்லாமல் ஒரு எதிர்காலம்
அத்துடன் அவரது குடியிருப்பில் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தி, அதில் பதிந்திருந்த விக்டரின் ரத்தம், டி.என்.ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்ட தரவுகள் என அனைத்தும் Elijah Gookol-Mely குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில் ஓல்டு பெய்லி நீதிமன்றம் Elijah-வுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையில் சிறை விதித்துள்ளது. விக்டரின் சகோதரி தெரிவிக்கையில், அவர் தனது உடன்பிறந்தவர் மட்டுமல்ல, தனது 'சிறந்த நண்பர்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமது மிக மோசமான தருணங்களில் ஆதரவாகவும் தேற்றவும் செய்த மிகவும் பாசமான சகோதரர் விக்டர் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி விக்டர் இல்லாமல் ஒரு எதிர்காலத்தை தாம் எதிர்கொள்ள இருப்பதை நினைத்து அச்சம் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |