பிரித்தானியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் சிறார்களுக்கு நேர்ந்த கொடூரம்
brit teenagers attacked in halloween party: பிரித்தானியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கத்திக் குத்து சம்பவத்தில் ஐந்து சிறார்கள் படுகாயமடைந்தனர்.
பிரித்தானியாவின் ஹாம்ப்ஷயரில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில், ஐந்து சிறார்கள் கத்திக் குத்து தாக்குதலுக்கு உள்ளாகினர்.
ஹாலோவீன் கொண்டாட்டம்
ஹாம்ப்ஷயரின் Chandlers Ford பகுதியில் உள்ள வீடொன்றில் ஹாலோவீன் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது அடையாளம் தெரியாத ஒரு குழு நுழைந்ததைத் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதில் 16 வயதுடைய மூன்று சிறுவர்களும், 17 வயதுடைய இரண்டு சிறுவர்களும் என மொத்தம் ஐந்து பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் முன்வந்து காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
