மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே இறந்துவிட்டார்... ஜேர்மானியர் குறித்து ஈரான் தெரிவித்துள்ள செய்தி
ஜேர்மானியர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், மரண தண்டனை நிறைவேற்றும் முன்பே அவர் இறந்துவிட்டார் என ஈரான் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மானியருக்கு மரண தண்டனை
ஜேர்மன் ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான ஜம்ஷிட் ஷர்மாட் (Jamshid Sharmahd, 69) என்பவரை துபாயிலிருந்து கடத்திவந்து சிறையிலடைத்திருந்தது ஈரான் அரசு.
ஜம்ஷிடின் மகளான Gazelle, தனது தந்தைக்கு மரணதண்டனையிலிருந்து விலக்கு அளிக்குமாறு தொடர்ந்து கோரிவந்தார்.
ஆனாலும், கடந்த திங்கட்கிழமை, ஜம்ஷிடுக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகின.
ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான அனலேனா பேர்பாக் முதலானோர், ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.
ஈரான் தெரிவித்துள்ள செய்தி
ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றும் முன்பே ஜம்ஷிட் இறந்துவிட்டார் என ஈரான் தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்ஷிடுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது உண்மைதான். அவரது தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றும் முன்பே ஜம்ஷிட் இறந்துவிட்டார் என ஈரான் நீதித்துறை செய்தித்தொடர்பாளரான Asghar Jahangir என்பவர் தெரிவித்துள்ளார்.
விடயம் என்னவென்றால், ஈரான் அரசு இதற்கு முன் வெளியிட்ட செய்தி ஒன்றில், ஜம்ஷிடுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்ஷிடின் மகளான Gazelle, தனது தந்தையின் மரணம் குறித்த விவரங்களை வெளிப்படையாக கோரியதுடன், அவரது உடலை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என கோரியதைத் தொடர்ந்து தற்போது ஈரான் தரப்பிலிருந்து இப்படி ஒரு செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.'
வீடியோவை காண
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |