தேஜாஸ் விபத்து... இந்தியாவின் போர் விமான ஏற்றுமதி நம்பிக்கையில் விழுந்த பேரிடி
துபாய் விமானக் கண்காட்சியில் உலகளாவிய ஆயுதம் வாங்குபவர்களுக்கு முன்னால் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானம் விபத்துக்குள்ளானது வலுவான அடியாகவே பார்க்கப்படுகிறது.
கடும் பின்னடைவாக
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், அந்த நிகழ்வில் செல்வாக்கு செலுத்துவதற்காக ஒரு வாரமாக நடத்தப்பட்ட நகர்வுகள் அனைத்தும் வீணாகியுள்ளது.

மேலும், உலக நாடுகள் முன்னிலையில் ஏற்பட்டுள்ள இந்த இழப்பு, நான்கு தசாப்தங்களாக முன்னெடுத்து வரும் கடினமான உழைப்பிற்குப் பிறகு வெளிநாட்டில் தனது போர் விமானங்களை முன்னிலைப்படுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு கடும் பின்னடைவாக மாறும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆனால், தற்போது தேஜாஸ் எதிர்மறையான விளம்பரத்தை சந்தித்தாலும், அது மீண்டும் தனது தகுதியை உலக அரங்கில் மீட்டெடுக்கும் என்றே அமெரிக்க நிபுணர் ஒருவரின் கருத்து.
பாரிஸ் மற்றும் பிரித்தானியாவின் ஃபார்ன்பரோவிற்குப் பிறகு உலகின் மூன்றாவது பெரிய விமானக் கண்காட்சி துபாயில் முன்னெடுக்கபப்டுகிரது.
இதுபோன்ற நிகழ்வுகளில் விபத்துக்கள் ஏற்படுவது அரிதான சம்பவம் என்றே கூறுகின்றனர். 1999 ஆம் ஆண்டு, பாரிஸ் விமானக் கண்காட்சியில் ரஷ்ய சுகோய் Su-30 தரையைத் தொட்ட நிலையில் விபத்துக்குள்ளானது. ஒரு தசாப்தத்திற்கு முன்பு இதே நிகழ்வில் ஒரு சோவியத் மிக்-29 விபத்துக்குள்ளானது.

தன்னம்பிக்கைக்கான
இந்த சம்பவங்களில் விமானிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர், மேலும் இந்தியா இந்த இரண்டு போர் விமானங்களுக்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது.
சோவியத் காலகட்டத்தைச் சேர்ந்த மிக்-21 ரக விமானங்களை மாற்ற இந்தியா முயற்சிகள் தொடங்கியபோது, 1980களில் தேஜாஸ் திட்டம் தொடங்கப்பட்டது.
துபாயில் ஏற்பட்ட விபத்து, தற்போதைக்கு ஏற்றுமதி என்பது கடினம் என்று சமீபத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறிய முன்னாள் HAL நிர்வாகி ஒருவர் கூறினார். ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளை இலக்கு வைத்தே தேஜாஸ் விளம்பரப்படுத்தப்படுகிறது.

மலேசியாவிலும் 2023 முதல் HAL நிறுவனத்திற்கு அலுவலகம் செயல்படுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆனால் தேஜாஸை தங்களின் தன்னம்பிக்கைக்கான எடுத்துக்காட்டாக அதிகளவில் முன்னிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |