மாதந்தோறும் மகளிருக்கு ரூ.2500! இன்னும் பல வாக்குறுதிகள்
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், தெலுங்கானா உட்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக பார்க்கப்படுவதால் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் ஆட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் இன்று தெலுங்கானாவில் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸின் மூத்த தலைவரான சோனியா காந்தி, தெலுங்கானா மக்களுக்கு ஐந்து வாக்குறுதிகளை தருகிறேன்.
காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்
* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500
* காஸ் சிலிண்டர் விலை ரூ.500
* அரசு பேருந்தில் மகளிர்க்கு இலவச பயணம்
* வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட 5 லட்ச ரூபாய் பணம்
* 200 யூனிட் இலவச மின்சாரம்
என வாக்குறுதிகள் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |