நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்: உயிருக்கு போராடும் சிறுவன்
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் இடைக்கால ஜாமினை எதிர்த்து, பொலிஸார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த பெண்
சமீபத்தில் வெளியான 'புஷ்பா 2' தெலுங்கு படத்தை பார்க்க சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்ததால்தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் பின் ஜாமினில் வெளியே வந்தார்.
ஜாமினை எதிர்த்து
இதற்கிடையில் கூட்ட நெரிசலில் பலியான பெண்ணின் 8 வயது மகன், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், தெலங்கானா பொலிஸார் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |