டெலிகிராம் தடைக்கு பின்னணியில் மெட்டா, ரிலையன்ஸ் - பாவெல் துரோவ் குற்றச்சாட்டு

Reliance NEET Meta Telegram
By Karthikraja Jun 17, 2026 09:05 AM GMT
Report

டெலிகிராம் தடைக்கு பின்னணியில் மெட்டா, ரிலையன்ஸ் இருப்பதாக பாவெல் துரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டெலிகிராம் செயலிக்கு தடை

டெலிகிராம் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் நீட் மறுதேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக டெலிகிராம் செயலிக்கு நீட் மறுதேர்வு நடைபெறும் ஜூன் 22 ஆம் திகதி வரை தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. 

டெலிகிராம் தடைக்கு பின்னணியில் மெட்டா, ரிலையன்ஸ் - பாவெல் துரோவ் குற்றச்சாட்டு | Telegram Ceo Pavel Durov Accuses Reliance For Ban

நீட் தேர்வு எழுதுபவர்கள் மட்டும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தவில்லை, நீட் தேர்வை முறையாக நடத்த திறனற்ற தேசிய தேர்வு முகமையின் நிர்வாக குறைபாட்டிற்கு ஒட்டுமொத்தமாக செயலிக்கும் தடை விதிப்பது ஏற்புடையது இல்லை என சமூகவலைத்தளங்களில் பலரும் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெலிகிராம் செயலி தடைக்கு அதன் சிஇஓ பாவெல் துரோவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, மெட்டா மற்றும் ரிலையன்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார். 

பாவெல் துரோவ் குற்றச்சாட்டு

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சில பயனர்கள் நீட் கசிந்த தேர்வு வினாக்களைப் பகிர்ந்ததால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டெலிகிராமை ஒரு வாரத்திற்குத் தடை செய்தது.  

டெலிகிராம் தடைக்கு பின்னணியில் மெட்டா, ரிலையன்ஸ் - பாவெல் துரோவ் குற்றச்சாட்டு | Telegram Ceo Pavel Durov Accuses Reliance For Ban

இந்த தடை தேர்வுப் பொருட்களைக் கசியவிட்ட நபர்களை தண்டிக்கவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான சாதாரண டெலிகிராம் பயனர்களைத் தண்டிக்கிறது.

மேலும், இந்தத் தடை எதையும் தடுத்து நிறுத்தவில்லை. வினாத்தாள் கசிவு மற்ற செயலிகளுக்கு மாறிவிட்டது.

கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் கசிந்த தேர்வுப் பொருட்கள் மற்றும் அது தொடர்பான மோசடிகளைப் பகிர்ந்த நூற்றுக்கணக்கான சேனல்களை நாங்கள் நீக்கியுள்ளோம். 

[

]

மேலும், முன்தேதியிடல் மோசடிகளைத் தடுப்பதற்காக, 'திருத்தப்பட்டது' என்ற குறியீட்டை நாங்கள் தெளிவாகத் தெரியும்படி செய்து வருகிறோம்.

டெலிகிராம் ஒரு நல்ல சக்தி. அதைத் தடை செய்வது தற்காலிகமாகத் தடை செய்தாலும்கூட, தவறாகும்" என தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், BGP ஹைஜாக்கிங் எனப்படும் ஒரு முறைகேடான வழிமுறையின் மூலம், இந்தியாவிற்கு வெளியே (ஐக்கிய அரபு அமீரகம் உட்பட) உள்ள மில்லியன் கணக்கான பயனர்களின் டெலிகிராம் அணுகலைச் சீர்குலைக்கிறது. 

ரிலையன்ஸ் பல புகார்களைப் புறக்கணித்துள்ளதால், இந்தச் சீர்குலைப்பு வேண்டுமென்றே செய்யப்படுவதாகத் தெரிகிறது. வாட்ஸ்அப்பை உருவாக்கிய நிறுவனமான மெட்டா, ரிலையன்ஸின் ஒரு பகுதி உரிமையாளராக இருப்பதால், இது ஒரு போட்டிப் போரின் பகுதியாக இருக்கலாம்.

வழித்தடக் கடத்தல்களைத் தடுக்கவும், தங்கள் பயனர்களுக்கு நிலையான இணைய அணுகலை உறுதி செய்யவும், ரிலையன்ஸிடமிருந்து வரும் அங்கீகரிக்கப்படாத BGP அறிவிப்புகளை (AS18101) நிராகரிக்குமாறு நெட்வொர்க் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகளாவிய இணைய வழித்தடத்தின் இத்தகைய தவறான பயன்பாடு கவலை அளிக்கிறது. இந்தியாவில் டெலிகிராமைத் தடை செய்வதற்கான சமீபத்திய பரப்புரை முயற்சிக்குப் பின்னாலும் ரிலையன்ஸ்/வாட்ஸ்அப் இருக்கலாம் என்பதில் எனக்கு ஆச்சரியமில்லை" என தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்அப் சந்தைப் பங்கை தக்க வைக்க வழி

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், "VPN உடன் கூட நம்மால் டெலிகிராமை இன்னும் பயன்படுத்த முடியும் என்பதை அவர்கள் யோசிக்கவே இல்லை. நமது அரசாங்கத்திடமிருந்து இந்த முட்டாள்தனத்தை நான் எதிர்பார்க்கவில்லை.

அந்த கசிவுகள் இன்னமும் கசியும், இப்போது அது x, வாட்ஸ்அப், டிஸ்கார்ட் போன்றவற்றிலும் பரவும்" என தெரிவித்துள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள பாவெல் துரோவ், "இந்தியாவில் டெலிகிராமைத் தடைசெய்யும் முடிவு, எதையும் சரிசெய்யக்கூடிய ஒரு முறையான ஒழுங்குமுறை நடவடிக்கையை விட, வாட்ஸ்அப் அதன் சந்தைப் பங்கைத் தக்கவைத்துக் கொள்ள உதவும் ஒரு வழியாகவே தெரிகிறது.

கூடிய விரைவில் இது மறுபரிசீலனை செய்யப்படும் என நம்புகிறோம்" என தெரிவித்துள்ளார்.

டெலிகிராம் கிண்டல்

உண்மையாகவே டெலிகிராம் செயலியை தடை செய்வது தேர்வுத் தாள்கள் கசிவதைத் தடுப்பதற்கான ஒரு மாபெரும் உத்தி இதுதானா? காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு கிண்டலாக பதிலளித்துள்ள டெலிகிராம், வணிக வளாகங்களில் ஒன்றில் திருட்டு நடந்திருக்கலாம் என்பதால், அனைத்தையும் மூடிவிட வேண்டும். மேலும், யாரோ ஒருவர் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாகக் கேள்விப்பட்டதால், சாலைகளையும் மூடிவிடுங்கள் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தடையை எதிர்த்து டெலிகிராம் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய விடுமுறைக்கால அமர்வின் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US