நீங்கள் இல்லாமல் எப்படி வாழ்வார்கள்.. பிரச்சனையை பெற்றோரிடம் சொல்லுங்க: குஷ்பூ உருக்கம்
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் நடிகை குஷ்பூ உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி மகள் தற்கொலை
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று காலை 3 மணி அளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திரைபிரபலங்கள் பலரும் விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
குஷ்பூ உருக்கம்
இது தொடர்பாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், "ஒரு பெற்றோராக, 16 வயது மகளின் இழப்பால் விஜய் ஆண்டனி, அவரது மனைவி பாத்திமா மற்றும் அவர்களின் இளைய மகள் ஆகியோர் எப்படி இதைத் தாங்கிக் கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை.
ஒரு பலவீனமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், ஒருபோதும் ஆறாத காயத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் எப்போதும் தங்கள் பெற்றோரிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் பேசலாம்.
அவர்கள் உங்கள் யோசனைகளுக்கு உடன்படாமல் இருந்தாலும் இறுதியில் புரிந்துகொள்வார்கள். பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் அவர்களுக்காகவே வாழ்கிறார்கள். உங்கள் மீது விழும் சிறு கீறல் கூட அவர்களுக்கு வலி கொடுக்கும்.
நீங்கள் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். மன அழுத்தம், மன நெருக்கடி அல்லது எந்த வகையான அழுத்தத்திலும் இருந்தால், தயவுசெய்து அவர்களிடம் சொல்லுங்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
As a parent, cannot even fathom the pain parents will be going through at the loss of their young 16 yr daughter
— KhushbuSundar (@khushsundar) September 19, 2023
Heart goes out to #VijayAnthony n his wife Fatima n their younger daughter.
Decisions taken at a spur of a weak moment, leaves wound that never heals.
Young…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |