டெம்பர்டு கிளாஸ் ஒட்டுவது சரியா தவறா? மொபைல் சூடாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
மொபைல் போன்களில் டெம்பர்டு கிளாஸ் ஒட்டுவதால் வரும் பிரச்சினை என்ன? பாதுகாப்பானது என நாம் நினைப்பது உண்மையில் தவறான செயலா?
அதிக வெப்பத்தால் பாதிக்கும் மொபைல் போன்கள்
அதிகமாக வெப்பமடையும் எந்தவொரு மின்னணு சாதனமும் வேலை செய்ய திணறும், சரியாக செயல்படாது, வேகமாக இயங்காது, வேலை செய்யும் திறன் குறையும், விரைவில் பழுதாகும். மொபைல் போன்களும் அதேபோலத்தான்.
மின்னனு சாதனங்களை இயங்க வைக்கும் உள்பாகங்கள் செயல்படும்போது வெப்பத்தை உண்டாக்கும். மொபைல் போனில் இருக்கும் ப்ராசஸரும் (Processor chip) அப்படித்தான். ப்ராசஸர் செயல்படும்போது செல்போன் சூடாகும். அவ்வாறு சூடாகும்போது மொபைல் இயங்கும் வேகம் குறைகிறது.
மின்னணு சாதனங்கள் பொதுவாக 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பத்தில் இயங்குவதற்கு ஏற்ப வடிவமைக்கப் படுகின்றன.
பேட்டரி பாதிக்கும், சார்ஜ் குறையும்
இவ்வாறு மொபைல் போனில் உள்ளிருக்கும் சிப்கள் சூடாகும்போது, பேட்டரியும் சூடாகி அதிக ஆற்றலைச் செலவிடும். இதனால் பேட்டரிகள் விரைவாக சார்ஜ் இழக்கின்றன.
அதேபோல், வெளிச்சம் அதிகமாக இருக்கும்போது மொபைல் டிஸ்பிலேவின் வெளிச்சத்தைக் கூட்டுகிறோம். இதுவும் பேட்டரிகளின் செயல்பாட்டை பாதிக்க்கும்.
டிஸ்பிளே பாதிக்கும்
உங்கள் மொபல் போனின் திரை திடீரென மாறியிருக்கிறதென்றால், அதற்கு வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம். போனின் டிஸ்பிளேவில் ஏற்கெனவே ஒரு சிறிய சேதம் இருந்தால், வெப்பம் அதனை மேலும் சேதமடையச் செய்யும்.
அதேபோல், மொபைல் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் tempered glass அல்லது Scratch Card அல்லது Screen Protector உள்ளே அதிக வெப்பத்தைத் தேக்கி வைக்கின்றன. இதனால் உங்கள் செல்போன் மிக வேகமாக சூடாகலாம்.
மொபைல் போன் அதிகமாக சூடாகாமல் பாதுகாப்பது எப்படி?
- ஏற்கெனெவே சூடாக இருக்கும் போனை உடனடியாக சார்ஜ் போடக்கூடாது, அது மேலும் வெப்பத்தை அதிகரிக்கலாம்.
- கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது என செல்போனை உபயோகப்படுத்திக்கொண்டே சார்ஜ் போடக்கூடாது.
- செல்போனை நேரடியாக வெயில் படும்படி வைக்ககூடாது.
- மொபைல் போனை எப்போதும் கவர் செய்து வைக்கக்கூடாது. சர்ச் போட்டு வைக்கும்போது, அல்லது பயன்படுத்தாமல் சும்மா வைக்கும்போது பவுச், பேக் கேஸ் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக காற்றோட்டமாக வைப்பது நல்லது.
- செல்போனில் இருக்கும் தேவையற்றச் செயலிகளை Un-Install செய்வது நல்லது. பயன்படுத்தாத செயலிகளை நிறுத்தி வைப்பது நல்லது.
- பயன்படுத்தாத நேரத்தில் தேவை இல்லாமல் GPS, Wifi, Bluetooth போன்றவற்றை disable செய்து வைப்பது நல்லது.
- தேவையான நேரங்களில் Low Power Mode-ஐ பயன்படுத்தலாம். எவ்வளவு குறைவான ஆற்றலைப் பயன்படுத்துகிறீகளோ, உங்கள் மொபைல் அவ்வளவு நலமாக இருக்கும்.
- செல்போனை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதல்ல, அவ்வாறு குளிர்சாதன பெட்டியிலோ, ஐஸ் கட்டிகளிலோ வைப்பதால், சட்டென மாறும் வெப்பநிலைகள் ஃபோன்களுக்கு மிகவும் ஆபத்தானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |