தோல்வியின் விளிம்பில் பிரித்தானியாவின் புதிய 12 பில்லியன் பவுண்டுகள் போர் விமானம்
பிரித்தானியாவின் புதிய 12 பில்லியன் பவுண்டுகள் போர் விமானத் திட்டமானது தோல்வியடையும் அபாயத்தில் இருப்பதாக உத்தியோகப்பூர்வ தணிக்கை எச்சரித்துள்ளது.
இத்தாலி மற்றும் ஜப்பானுடன்
உத்தியோகப்பூர்வமாக FCAS என்றழைக்கப்பட்ட அந்த திட்டமானது வெற்றிகரமாக நிறைவேற்றுவது என்பது சாத்தியமற்றது என்ற நிலையில் இருப்பதாக அரசாங்க அமைப்பே அறிவித்துள்ளது.
பிரித்தானியாவில் Tempest என அடையாளப்படுத்த முடிவு செய்யப்பட்ட அந்த போர் விமானமானத் திட்டமானது இத்தாலி மற்றும் ஜப்பானுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.
மட்டுமின்றி, யூரோஃபைட்டர் டைபூனுக்கு மாற்றாகவும் Tempest போர் விமானத்தை கொண்டுவரவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தை முன்னெடுத்து நடத்தும் BAE Systems தெரிவிக்கையில், 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் Tempest போர் விமானத்தின் முன்மாதிரி வெளியிடப்படும், விமானப்படை சேவைக்கு 2035ல் ஒப்படைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டார்மர் அரசாங்கம்
ஸ்டார்மர் அரசாங்கம் இந்த திட்டத்தில் உறுதியாக இருந்தாலும், தொழில்துறையில் சிலர் குறிப்பிட்ட திட்டங்களுக்கு இன்னும் உறுதியான நிதி உறுதிமொழி தேவை என குறிப்பிடுகின்றனர்.
Tempest போர் விமானத்தை உருவாக்கும் GCAP நிறுவனம் சமீபத்தில் ரீடிங் பகுதியில் அலுவலகம் ஒன்றை திறந்து, 3,500 வேலை வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், இந்தத் திட்டத்தால் ஏற்படும் சவால்களின் அளவை ஒப்புக்கொள்வதாக ஸ்டார்மர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், FCAS திட்டமானது முன்னர் வெற்றிகரமாக நிறைவேற்றுவது சாத்தியம் என்ற கட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |