லொட்டரியால் கோடீஸ்வரரான கோவில் பூசாரி.., எவ்வளவு தொகை விழுந்தது?
கேரளாவில் லொட்டரி டிக்கெட் வாங்கிய கோவில் பூசாரிக்கு பெரிய ஜாக்பாட் தொகை அடித்ததால் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
கோவில் பூசாரி
இந்திய மாநிலமான கேரளாவில், இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் பூசாரியாக இருப்பவர் மதுசூதனன்.
இவர் கடந்த 20 ஆண்டுகளாக இந்த கோவிலில் தலைமை பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு ஆதிரா என்ற மனைவியும் வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவர் லொட்டரி டிக்கெட்டுக்கள் வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். இவர் வாங்கும் லொட்டரி டிக்கெட்டுகளுக்கு சிறிய அளவிலான தொகை மட்டுமே விழுந்துள்ளது.
அதேபோல, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் வாங்கிய லொட்டரியில் ஒரு இலக்க வித்தியாசத்தில் ரூ.70 லட்சத்தை தவற விட்டார்.
ஆனால், தற்போது மதுசூதனன் வாங்கிய லொட்டரி டிக்கெட்டிற்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது. இவர், பக்தர்களிடம் எப்போதும் கனிவாக நடந்து கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.
இவரது தெவ்வீக பணியின் ஆசீர்வாதத்தின் காரணமாகவே ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.
ரூ.1 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளதால் மதுசூதனன் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |