கணிசமான அளவில் அதிகரித்துவரும் அகதிகள் எண்ணிக்கை: கனடா எடுக்கவிருக்கும் நடவடிக்கை
கனடாவில், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அவர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
அகதிகளுக்காக தற்காலிக தங்குமிடங்கள்
Ottawa நகரம், அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக தற்காலிக தங்குமிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளthu.
அவை தற்காலிட தங்குமிடமாகவும், மொழிப் பயிற்சி மற்றும் பணி உதவி ஆலோசனை மையமாகவும் செயல்பட இருக்கின்றன.
இந்த தங்குமிடங்கள், அகதிகள் சில வாரங்கள் தங்குவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. பின் அவர்கள் பொருத்தமான இடங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
விடயம் என்னவென்றால், இப்படி அகதிகளுக்காக அரசு தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள விடயம், சம்பந்தப்பட்ட பகுதியில் அக்கம்பக்கத்தில் வாழும் கனேடியர்களுக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது.
சொல்லப்போனால், உள்ளூர் மக்களுடைய எதிர்ப்பு காரணமாக, Ottawa நகரத்தில் அகதிகளுக்காக கட்ட திட்டமிடப்பட்டிருந்த முதல் தற்காலிக தங்குமிடம் ரத்து செய்யப்பட்டேவிட்டது.
ஆகவே, அதற்கு பதிலாக தற்போது வேறு இரண்டு இடங்களில் தற்காலிக தங்குமிடங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |