கனடாவில் வாழும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும்: கனடா பிரதமர்
கனடாவில் வாழும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும்
2027ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், கனடாவில் வாழும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை மேலும் குறைக்கப்படும் என கனடா பிரதமரான மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில், சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் அடங்கும்.
பல நாடுகளைப்போலவே, கனடாவிலும் புலம்பெயர்தலுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியா முதலான பல நாடுகளில் புலம்பெயர்தல், அரசியல் வட்டாரம் வரை முக்கிய பேசுபொருளாகிவருகிறது.
இந்நிலையில் ஆல்பர்ட்டா மாகாண தலைநகரான எட்மண்டனில் கட்சிக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி, அவரது தலைமையிலான அரசு, கனடாவில் புலம்பெயர்தலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று கூறியுள்ளார்.
அவ்வகையில், தற்காலிகப் பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் உட்பட கனடாவில் வாழும் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கை, 2027ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், சுமார் 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம், வரும் வாரங்களில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட இருக்கும் புலம்பெயர்தல் திட்டத்தில் எதிரொலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |