பத்து பேர் உயிரிழப்பு: சுவிஸ் சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு சிறைத்தண்டனை
சுவிட்சர்லாந்தில் சீஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சீஸை சாப்பிட்டவர்களில் 10 பேர் உயிரிழந்தார்கள்.
அது தொடர்பாக நீண்ட நாட்களாக நடந்துவந்த வழக்கில் தற்போது அந்த சீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
பத்து பேர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில், 2018ஆம் ஆண்டு முதல், 2020ஆம் ஆண்டுவரை, சீஸ் சாப்பிட்ட 34 பேருக்கு Listeria என்னும் நோய்க்கிருமி பாதிப்பு ஏற்பட்டது, 10 பேர் உயிரிழந்தார்கள்.
இந்த விடயம் தொடர்பாக நீண்ட விசாரணை நடந்துவந்த நிலையில், அந்த சீஸ் Käserei Vogel என்னும் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டு அந்நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது.
சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு சிறைத்தண்டனை
இந்த விடயம் தொடர்பான விசாரணை இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுபெற்றது.
சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மீது, கவனக்குறைவு காரணமாக, உயிரிழப்பு மற்றும் உடல் நல பாதிப்பை ஏற்படுத்துதல், உணவுச் சட்டத்தை மீறுதல் முதலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், Schwyz மாவட்ட நீதிமன்றம் ஒன்று அந்த சீஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. என்றாலும், அவர் உடனடியாக சிறைக்குச் செல்லத் தேவையில்லை. மீண்டும் அவர் குற்றமிழைப்பாரானால் அவர் சிறை செல்ல நேரிடும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |