சென்னையில் வர உள்ள நீர் மெட்ரோ - திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் வெளியீடு
சென்னையில் நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் நீர் மெட்ரோ
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில், நீர் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருகிறது.

சென்னை எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிநவீன படகுகளை இயக்க பரிசீலித்து வருகிறது.
முதற்கட்டமாக நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை படகுகளை இயக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல், கேரள மாநிலம் கொச்சியில் நீர் வழி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |