சர்வதேச டென்னிஸ் தொடரில் கோப்பை வென்ற உக்ரைன் வீராங்கனை: அவர் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்
சர்வதேச டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்ற உக்ரைன் வீராங்கனை ஒருவர், தனது மொத்த பரிசு தொகையையும், உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
டென்னிஸ் தொடர்
பிரான்ஸ் நாட்டின் நடைபெற்ற சர்வதேச ஆக்ஸ்தி ஸ்டார்ஸ்போர்க் என்ற டென்னிஸ் தொடரில், உலக நாடுகளை சேர்ந்த பல வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
@JAM MEDIA/GETTY IMAGES
இந்நிலையில் உக்ரைன் நாட்டின் சார்பாக போட்டியில் கலந்து கொண்ட எலினா ஸ்விடோலினா என்ற வீராங்கனை, ரஷ்யாவை சேர்ந்த அன்னா பிலின்கோவா என்ற வீராங்கனையை இறுதிப் போட்டியில் வென்றுள்ளார்.
@JAM MEDIA/GETTY IMAGES
இதனை தொடர்ந்து அவருக்கு பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில், வென்றதற்காக பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சியூட்டும் செயல்
இந்நிலையில் பரிசு தொகையை பெறும்போது 28 வயதான உக்ரைன் வீராங்கனை, தனது பரிசு தொகை முழுவதையும், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
"I will be donating all my prize money from this tournament. Is going to go to the kids of Ukraine." ??@ElinaSvitolina | #IS23 pic.twitter.com/KcpaEUsJXs
— wta (@WTA) May 27, 2023
மேலும் தனது நாட்டிற்காக முழு மனதாக போட்டியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியதற்காக அவர் கூறியுள்ளார்.
பரிசு பெற்ற பின் பேசிய அவர் ‘பிரான்ஸ் உக்ரைனுக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறது, அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு இப்போரினை முடிவுக்கு கொண்டு வருவோம்’ என தெரிவித்துள்ளார்.
@JAM MEDIA/GETTY IMAGES
இதனை தொடர்ந்து அவரது செயலை பாராட்டி, அங்கிருந்த அனைவரும் கரகோஷம் எழுப்பியுள்ளனர். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.