ஒரே ஆண்டில் பள்ளிகளிலிருந்து மாயமான பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவியர்: அதிரவைக்கும் ஒரு செய்தி
பிரித்தானிய பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அதிகாரிகளுக்குத் தெரியாது எனவும் ஒரு செய்தி கூறுகிறது.
ஒரே ஆண்டில் பள்ளிகளிலிருந்து மாயமான 24,700 பேர்
இங்கிலாந்தில், ஒரே நாள் கணக்கெடுக்கும்போது 24,700 மாணவ மாணவியர் பள்ளிக்கு வரவில்லை என தெரியவந்துள்ளது.
கடந்த பள்ளி ஆண்டிலோ நிலைமை அதைவிட பயங்கரம். ஆம், 94,900 மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு வரவில்லை.
யார் இந்த மாணவர்கள்
அதாவது, ஒரு இடத்தில் வாழ்ந்த ஒரு குடும்பம், மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்தபின், அந்தக் குடும்பத்தில் உள்ள பிள்ளைகள் புதிதாக பள்ளி ஒன்றில் சேரவில்லை.
ஆக, அவர்கள் எந்தப் பள்ளியிலும் சேராததால், அந்த பிள்ளைகள் இப்போது எங்கிருக்கிறார்கள் என்பது கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாது.
சட்டப்படி, அந்தந்த பகுதி கவுன்சில்தான் இந்த பிள்ளைகள் எங்கிருக்கிறார்கள் என கண்டுபிடிக்கவேண்டும். ஆனால், கவுன்சில்களில் போதுமான அலுவலர்கள் இல்லாததால், மாணவ மாணவியரைக் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், மாணவ மாணவியர் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதையும், அவர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதையும் உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |