கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்குமிடையில் மோதல்
Tensions between PM, Quebec premier continue to flare: கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.
வெளிப்படையாக வெடித்த மோதல் கனடா பிரதமருக்கும் கியூபெக் பிரீமியருக்கும் இடையிலான உரசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், நேற்று செவ்வாயன்று இருவருக்குமிடையிலான மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, ஃபெடரல் அரசுதான் சில விடயங்களை முடிவு செய்யமுடியும் என்று கூற, மிஸ்டர் கார்னி என்னுடைய பாஸ் அல்ல என்று கியூபெக் பிரீமியரான பால் செயின்ட் ப்ளமண்டோன் பதிலடி கொடுத்துள்ளார்.
என்ன பிரச்சினை?
கியூபெக் பிரீமியரான பால் செயின்ட் பியரி ப்ளமண்டோன், சமீபத்தில் அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 59 பேருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதங்களில் கியூபெக்குடனான வர்த்தக உறவுகள் குறித்து குறிப்பிட்டுள்ள ப்ளமண்டோன், புதிய புராஜக்ட்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகள் நேரடியாக கியூபெக் தரப்புடன் இணைந்து செயலாற்ற அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்த விடயம் பிரதமர் கார்னிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது.
ப்ளமண்டோனின் கடிதம் குறித்து பிரதமர் கார்னியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப, ஒப்பந்தங்கள் மற்றும் முன்னெடுப்புகள் தொடர்பில் முடிவெடுப்பது அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க நீதிமன்றங்கள் முதலானவைதான் என்று அவர் பதிலளித்துள்ளார்.
அத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்த ஒருவர் மட்டுமே இருப்பது நல்லது என்றும், அந்த பொறுப்பு ஃபெடரல் அரசுடையது என்றும் கூறியுள்ளார் கார்னி.

ஆனால், மிஸ்டர் கார்னி என்னுடைய பாஸ் அல்ல என்று கூறியுள்ள ப்ளமண்டோன், கியூபெக் இதற்கு முன் செய்துவந்த விடயங்களை இனியும் தொடர்வதை கார்னி தடுக்கமாட்டார் என்றும் கூறியுள்ளார்.
எங்கள் விருப்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒரு சர்வதேச இருப்பைக் கொண்டிருப்பது கியூபெக்கின் விருப்பம் என்றும், வரும் மாதங்களில் கியூபெக் உலக அரங்கில் தனது இடத்தை தொடர்ந்து நிலைநிறுத்தும் என்றும் பிளமண்டன் கூறியுள்ளார்.