கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரியும் விவகாரம்: அதிகரித்துவரும் பதற்றம்
Tension peaking among Albertans as separation vote nears: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா பிரிவது தொடர்பான வாக்கெடுப்பு நெருங்கிவரும் நிலையில், அது தொடர்பில் மக்களிடையே பதற்றம் அதிகரித்துவருகிறது.
அடுத்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 19ஆம் திகதி, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியும் விவகாரம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
ஆல்பர்ட்டா பிரியும் விவகாரம்
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.

ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணம், கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள். ஆகவே, அதற்காக வாக்கெடுப்பு ஒன்றை நடத்த மாகாணம் முடிவு செய்துள்ளது.
அதிகரித்துவரும் பதற்றம்
இந்த வாக்கெடுப்பு தொடர்பில், மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. அதாவது, ஒன்று, ஆல்பர்ட்டா பிரியவேண்டும் என ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.
இரண்டாவதாக, ஆல்பர்ட்டா மாகாண கனடாவுடனேயே இருக்கவேண்டும், அது தனியாகப் பிரியக்கூடாது என ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.

மூன்றாவது ஒரு கருத்தும் நிலவுகிறது. அதாவது, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியக்கூடாது. அதே நேரத்தில், ஃபெடரல் அரசு மீது தங்களுக்கு அதிருப்தி உள்ளது என்பதை அரசுக்குக் காட்டவேண்டும்.
ஆகவே, வாக்கெடுப்பு நடைபெறவேண்டும், ஆனாலும், கனடாவிலிருந்து பிரிந்துவிடக்கூடாது என எண்ணும் ஒரு கூட்டமும் உள்ளது.
அது எப்படி சாத்தியம்?
விடயம் என்னவென்றால், அடுத்த வாரம் நடைபெற இருக்கும் வாக்கெடுப்புக்கான கேள்வித்தாளில் 10 கேள்விகள் இடம்பெற உள்ளன.

அவற்றில், பத்தாவது கேள்வி மிகவும் முக்கியமானது. அந்தக் கேள்வி, நீங்கள் கனடாவுடன் இணைந்திருக்க விரும்புகிறீர்களா அல்லது, ஆல்பர்ட்டா கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் முடிவெடுக்கும் வகையில் அடுத்த வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டுமா என கேட்கிறது.
ஆம், நீங்கள் நீங்கள் கனடாவுடன் இணைந்திருக்க விரும்புகிறீர்களா அல்லது பிரிய விரும்புகிறீர்களா என கேட்கவில்லை. ஆல்பர்ட்டா கனடாவிலிருந்து பிரிவது தொடர்பில் முடிவெடுக்கும் வகையில் அடுத்த வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டுமா என்றுதான் கேட்கிறது.
ஆகவே, தாங்கள் கனடா ஃபெடரல் அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறோம் என்பதைக் காட்ட இந்த வாக்கெடுப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில், இந்த விடயம், வீடுகளுக்குள்ளும், அலுவலகங்களும், ஏன் திருச்சபைகளிலும்கூட பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஏனென்றால், ஒரு வீடு, அலுவலகம், சபைக்குள்ளேயே, வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. சிலர் ஆல்பர்ட்டா பிரிய வேண்டும் என கருதுகிறார்கள். சிலர் பிரியக்கூடாது என விரும்புகிறார்கள்.
ஆக, நண்பர்கள் குடும்பத்தினரிடையே கூட மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதால், அதனால் வாக்குவாதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாதே என்னும் பதற்றம் பலருக்குள்ளும் காணப்படுகிறது.
திருச்சபைகள் கூட, மற்றவர்களுடைய கருத்துக்கு மரியாதை கொடுங்கள், என்ன நடந்தாலும், எதுவும் நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள் என ஆலோசனை கூறும் அளவுக்கு ஆல்பர்ட்டா மாகாணத்தில் பதற்றமான நிலைமை காணப்படுகிறது.