இந்தியாவுடன் இறுகும் நெருக்கடி: நட்பு நாடுகளை ஒன்று திரட்டும் கனடா
இந்தியா உடனான உறவு விரிசலடைந்து வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கனடா தனது நட்பு நாடுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவுக்கு சாதகமான பதில்
கனடா ஏற்கனவே, முக்கிய நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் விவாதித்துள்ளது. இந்த நாடுகளிடையே கனடா உளவுத்துறை பகிர்வு முன்னெடுத்தும் வருகிறது.
@reuters
ஆனால் கனடாவுக்கு சாதகமான பதில் இதுவரை இந்த நாடுகளில் இருந்து வரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்தியாவை பகிரங்கமாக விமர்சிக்க மறுத்த பிரித்தானியா, திட்டமிட்டபடி இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றே கூறியுள்ளது.
இருப்பினும், அறிக்கை ஊடாக இந்த விவகாரத்தை குறிப்பிட்டுள்ள பிரித்தானியா, இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் கருத்து தெரிவித்துள்ளது. கனடா விவகாரத்தில் பிரித்தானியா மிக சிக்கலான இடத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.
இந்தியாவுடன் கட்டாயம் வர்த்தக ஒப்பந்தம் முன்னெடுக்க வேண்டும் என்ற நிலையில் பிரித்தானியா உள்ளது. ஆனால் அமெரிக்கா மட்டும், கனடா விவகாரத்தில் இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
100க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி தெரிவிக்கையில், கனடா - இந்தியா விவகாரம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
G20 மாநாட்டின் போது இந்தியாவுக்கு எதிராக இந்த விவகாரத்தில் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முயன்றுள்ளார். ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட எஞ்சிய நாடுகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
@ap
பிரித்தானியாவில் இதேப் போன்று ரஷ்யரான Sergei Skripal மற்றும் அவரது மகளுக்கு விஷம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் கூட்டு முடிவெடுத்த அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் கனடா உள்ளிட்ட நட்பு நாடுகள் 100க்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகளை வெளியேற்றி ரஷ்யாவை பழி வாங்கியது.
ஆனால் Sergei Skripal விவகாரத்தில் தாங்களுக்கு பங்கில்லை என சம்பவம் நடந்த 2018ல் ரஷ்யா உறுதிபட தெரிவித்திருந்தது. தற்போது இந்தியா விவகாரத்தில் கனடாவின் நட்பு நாடுகளே முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இந்த நிலையில், வெளிப்படையாக அல்லது தனிப்பட்ட முறையில், கனடாவின் நட்பு நாடுகள் உறுதியான முடிவெடுக்க தவறினால், அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் Richard Fadden தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |