சட்டப்பூர்வமான கருணைக்கொலை: எழுந்த கடும் விமர்சனம்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதுடன், இனி குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படும் நோயாளிகள் கருணைக்கொலை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாகாண நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் பதிவானது.
நாடாளுமன்ற மேல்சபை உறுப்பினர்கள் புதன்கிழமை இரவு மற்றும் வியாழன் வரை கிட்டத்தட்ட 100 திருத்தங்களை விவாதித்த பிறகு வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளுக்கு ஏற்ப நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய சட்டம் காரணமாக, 18 மாதங்களில் இனி கருணைக்கொலை சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிட்னி கத்தோலிக்க பேராயர் அந்தோணி ஃபிஷர் ஆதரித்து அறிக்கை வெளியிட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு ஆபத்தான பாதை என குறிப்பிட்டுள்ள அவர், கருப்பு நாள் எனவும் தெரிவித்துள்ளார்.
சுயேச்சை எம்.பி.யான அலெக்ஸ் கிரீன்விச் கடந்த ஆண்டு இறுதியில் இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அவர் தெரிவிக்கையில், துன்பப்படுபவர்களுக்கு நேர்மை மற்றும் இரக்கத்தை இந்த சட்டம் உறுதி செய்துள்ளது என்றார்.
ஆனால், லிபரல் கட்சியின் நிதியமைச்சர் டேமியன் டுடெஹோப் இந்தச் சட்டத்தை ஒரு பயங்கரமான தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.