பிரித்தானியாவில் பள்ளிகள் திறந்தப்பின் நடைமுறைப்படுத்தவுள்ள விதிமுறைகள்! வெளியான முக்கிய தகவல்கள்
பிரித்தானியாவில் பள்ளிகள் திறக்கப்பட்டப் பின் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
பிரித்தானியாவில் வரும் மார்ச் 8-ஆம் திகதி அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் நடைமுறைப்படுத்தவுள்ள முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு திட்டத்தை அரசு வெளியிடவுள்ளது.
பள்ளிகளில் திறக்கப்பட்டதும், மாணவர்களுக்கு முதலில் ஒரு வெகுஜன கொரோனா சோதனை நடத்தப்பட கல்வி அமைச்சகம் திட்டமிட்டது.
ஆனால், மாணவர்களிடையே வெகுஜன சோதனை என்பது அபத்தமானது என்றும் மேல்நிலைபி பள்ளி மாணவர்களுக்கான சோதனை மட்டும் 2 வாரங்கள் வரை நீடிக்கும் என கல்வி அமைப்புகளிடமிருந்து கருத்துக்கள் வந்தன.
பள்ளிகளை ஒரு மருத்துவ தளமாக மாற்றுவதற்கு பதிலாக, சோதனை கிட்களை மாணவர்களுக்கு வீட்டிற்கே கொடுத்துவிட பள்ளி மற்றும் கல்லூரி சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அதேபோல், பெற்றோர்கள் தங்கள் டீனேஜ் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முறை வீட்டிலேயே கொரோனா சோதனை செய்ய வலியுறுத்தப்படவுள்ளது.
மேலும், இந்த விதிமுறைகளின் அடிப்படியில், மேல்நிலை பள்ளி மாணவர்கள் வகுப்புகளில் பாடம் நடத்தப்படும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டியிருக்கும்.
இந்த புதிய பள்ளி பாதுகாப்பு திட்டம் குறித்த தகவல்களை கல்வி அமைச்சகம் இன்னும் ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

