கணவரின் சொத்துக்காக மனைவி செய்த பயங்கர செயல்
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், தன் கணவரின் சொத்து தனக்குக் கிடைப்பதற்காக, கணவரையே கொன்று எரித்துள்ளார் பெண்ணொருவர்.
ஆடம்பர வாழ்வு வாழ்ந்த பெண்
தெலங்கானாவைச் சேர்ந்த நிஹாரிகா (29), இளம் வயதிலேயே திருமணமாகி கணவரைப் பிரிந்தவர்.
பண மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி சிறை சென்ற நிஹாரிகா, விடுதலையானபின் பெங்களூருவுக்குச் சென்றிருக்கிறார்.
2018ஆம் ஆண்டு, அங்கு அவர் ரமேஷ் (54) என்னும் தொழிலதிபரை திருமணம் செய்திருக்கிறார்.
ஆடம்பரமாக வாழ விரும்பிய மனைவியின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்திருக்கிறார் ரமேஷ்.
ஆனால், தனக்கு இந்திய மதிப்பில் 8 கோடி ரூபாய் வேண்டும் என நிஹாரிகா கேட்க, அவ்வளவு பணம் தரமுடியாது என மறுத்திருக்கிறார் ரமேஷ்.
பணம் தராததால் கோபமடைந்த நிஹாரிகா, தனது கணவரின் சொத்தை அபகரிக்கத் திட்டமிட்டுள்ளார்.
சொத்துக்காக பெண் செய்த பயங்கர செயல்
இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 8ஆம் திகதி, காபிக்கு பெயர் பெற்ற குடகு மாவட்டத்தில் ஒரு அடையாளம் தெரியாத, எரிந்த நிலையிலிருந்த உடலை பொலிசார் கண்டெடுத்துள்ளார்கள்.
16 பொலிசார் கொண்ட சிறப்புப் படைகள் அமைத்து அந்த நபர் யார், அவரைக் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவந்துள்ளார்கள் அதிகாரிகள்.
CCTV கமெரா காட்சிகளை ஆரய்ந்தபோது, குற்றம் நிகழ்ந்த நேரத்தில் அந்த இடத்தைக் கடந்து சென்ற ஒரு கார் குறித்து விசாரித்தபோது, அது ரமேஷுடைய கார் என்பது தெரியவரவே, நிஹாரிகா மீது பொலிசாரின் பார்வை திரும்பியுள்ளது.
விசாரணையில், ரமேஷின் இரண்டாவது மனைவியான நிஹாரிகா, சொத்துக்காக, தனது கூட்டாளிகளான Dr நிகில் என்னும் கால்நடை மருத்துவர், அங்கூர் ராணா என்னும் நண்பர் ஆகியோர் உதவியுடன் ரமேஷைக் கொன்று அவரது உடலை எரித்துவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |