பிரான்சில் பறவைகளிடமிருந்து பாலூட்டிகளுக்குப் பரவும் பயங்கர தொற்றுநோய்: கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்...
பிரான்சில் H5N1 என்னும் பயங்கர பறவைக்காய்ச்சல் பரவிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடகிழக்கு பாரீஸ் பகுதியில், அந்த பறவைக்காய்ச்சல் சிவப்பு நரிகளுக்கு பரவியுள்ளதாக விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
மூன்று நரிகள் உயிரிழப்பு
Meaux என்ற இடத்தில் அமைந்துள்ள இயற்கை வனவிலங்குகள் காப்பகத்தில் கடல் புறா அல்லது gull என அழைக்கப்படும் சில பறவைகள் இறந்துகிடந்துள்ளன.
அதே இடத்தில் மூன்று நரிகளும் இறந்து கிடக்கவே, அவற்றின் உடல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
அப்போது, ஒரு நரியின் உடலில் H5N1 என்னும் பறவைக்காய்ச்சல் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளை மேற்கோள் காட்டி விலங்குகள் நலனுக்கான உலக அமைப்பு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சலுக்கு ஏராளம் பறவைகள் பலியாவது ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வைரஸ் பாலூட்டிகளுக்கும் பரவுவது தெரியவந்துள்ளதால் அது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Tim Rains / Flickr cc