லண்டனில் இந்தியப் பெண் தயாரிப்பாளர் சந்தித்த பயங்கர அனுபவம்
இந்தியப் பெண் தயாரிப்பாளரான உஷா ஷர்மா என்பவர் லண்டனில் திரையரங்கம் ஒன்றில் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
உஷா விருதுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
உஷா ஷர்மா (48), விருதுகள் வென்ற திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆவார்.
இந்தியரான உஷா, லண்டனிலுள்ள Vue cinema என்னும் திரையரங்கத்துக்கு திரைப்படம் ஒன்றைக் காணச் சென்றுள்ளார்.
இடைவேளையின்போது கழிவறைக்குச் சென்ற உஷாவை அங்கிருந்த மூன்று பெண்கள் கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். மூன்று பேருமாக உஷாவை சுற்றி வளைத்து, அவரது பர்ஸ், ஓட்டுநர் உரிமம், கிரெடிட் கார்டு ஆகியவற்றை அவரிடமிருந்து பறித்துள்ளார்கள்.
Image: Usha Sharma
உடனே அவசர உதவியை அழைப்பதற்காக உஷா தனது மொபைல் போனை எடுக்க, அவரது கையில் பலமாக தாக்கி, அவரது போன் விழுந்ததும் அதையும் தூக்கிக்கொண்டு சென்றுள்ளார் ஒரு பெண். உஷா அவரைப் பின் தொடர முயன்றபோது மற்ற பெண்கள் வழியை மறித்துக்கொண்டு நின்றார்களாம்.
உஷா உதவி கோரி சத்தமிட்டும் யாரும் உதவிக்கு வரவில்லையாம். இத்தனைக்கும் திரையரங்க பாதுகாவலர்கள் அங்கு நின்றிருந்திருக்கிறார்கள். அவர்கள் கண் முன்னாலேயே உஷாவின் கையிலிருந்த கைக்கடிகாரத்தைப் பறிக்க அந்தப் பெண்களில் ஒருவர் முயல, உஷா உதவி கோரி சத்தமிட்டதும், அந்த பாதுகாவலர்கள் அவருக்கு உதவாமல், வேறு பக்கம் திரும்பி நின்றுகொண்டார்களாம்.
உடல் முழுவதும் காயங்களுடன் வெளியே வந்த உஷா, அருகில் நின்ற ஒருவரிடம் மொபைல் போன் இரவல் வாங்கிதான் அவசர உதவியை அழைத்தாராம்.
இந்த விரும்பத்தகாத அனுபவத்தால் தான் நிலைகுலைந்து போயிருப்பதாக தெரிவித்துள்ள உஷா, தன்னால் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை என்கிறார்.
Image: Usha Sharma
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
லண்டனில் வாழ்ந்துவரும் உஷா ஷர்மா பல விருதுகளை வென்றுள்ளதுடன், அவரது திரைப்படங்கள் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த ஆண்டு பிரித்தானிய ஆசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக உஷா பிரித்தானியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.