சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு இரவில் கேட்ட பயங்கர சத்தம்: காலையில் கண்ட அதிரவைத்த காட்சி
சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு இரவில் ஏதோ பயங்கர சத்தம் கேட்டுள்ளது. விடிந்ததும் அவர்கள் வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம் என்பது.
இரவில் கேட்ட சத்தம்
கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சுவிட்சர்லாந்தின் Nidwalden மாகாணத்திலுள்ள Wolfenschiessen நகரில் அமைந்துள்ள ஒரு குடும்பத்தினர் ஏதோ பலத்த சத்தம் கேட்பதை கவனித்துள்ளானர்.
மறுநாள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டுக்கு 25 மீற்றர் தொலைவில் பெரிய பாறை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர்.
(c) Kapo NW
அதாவது, அந்த பகுதியில் உள்ள மலையிலிருந்து ஒரு பெரிய பாறை பெயர்ந்து உருண்டு வந்துள்ளது. ஆனால், உருண்டுவந்த அந்த பாறை, எப்படியோ, அந்த வீட்டிற்கு சற்று தொலைவிலேயே நின்றுவிட்டிருக்கிறது.
அந்த பாறை அந்த வீட்டின்மேல் மோதியிருக்குமானால், அது வந்த வேகத்திற்கு அந்த வீடு முற்றிலும் சேதமாகியிருக்கக் கூடும்.
ஆக, தாங்கள் உயிர் தப்பியது அதிர்ஷ்டம்தான் என அந்த வீட்டார் நிம்மதிப் பெருமூச்சுவிட, மறுபக்கம், இனிமேலும் ஏதேனும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |