மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள்...ஒருவர் பலி, பலர் மருத்துவமனையில்
அமெரிக்காவில், பல மாகாணங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பர்கர் வகை உணவுகளில் பயங்கர நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெக்டொனால்ட்ஸ் பர்கரில் பயங்கர நோய்க்கிருமிகள்
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், பர்கர் உணவில் நோய்க்கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பர்கர் சாப்பிட்ட ஒருவர் பலியாகியுள்ளதுடன், 49 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 10 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஈ கோலை என்னும் கிருமியே இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பர்கரில் சேர்க்கப்பட்டுள்ள எந்த உணவுப்பொருளில் இந்த கிருமி பரவியுள்ளது என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்நிலையில், பர்கர் சாப்பிட்டவர்களில் யாருக்காவது வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |