மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்
உலக நாடுகளை மொத்தமாக உலுக்கும் மிக மோசமான பங்குச்சந்தை வீழ்ச்சி வரப்போவதாக பொருளாதார நிபுணர்கள் சிலர் ஆதாரங்களுடன் பட்டியலிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப புரட்சி
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது நாம் விரும்பினாலும் இல்லை என்றாலும் அது நீடிக்க இருப்பதகாவும், நமது வாழ்க்கை முறையை அது மிக மோசமாகவும் மற்றும் மிக நன்றாகவும் மாற்றக் கூடும் என தெரிவிக்கின்றனர்.

பெரு நிறுவனங்கள் பல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வரவேற்றுள்ளதுடன், தொழிலாளர்களுக்கான செலவுகளை குறைக்கத் தொடங்கியுள்ளனர். 1990களில் இணையத்தை அடிப்படையாக கொண்டு தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட போதும், அதில் வெற்றியாளர்களும் தோல்வியாளர்களும் இருந்தார்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் எஸ்&பி 500 குறியீடு 84 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் Nvidia நிறுவனத்தின் பங்கு விலை கிட்டத்தட்ட நம்பமுடியாத அளவுக்கு 1,264 சதவீதம் உயர்ந்தது.
மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 325 சதவீதம் உயர்ந்துள்ளன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமேசான் பங்குகள் மட்டும் வெறும் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் கோலோச்சும் சில தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் அதிக மதிப்பு உள்ளிட்டவையை ஆய்வுக்கு உட்படுத்தினால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமெரிக்காவில் நீண்ட காலம் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இது மார்ச் 2000 இல் டாட்காம் குமிழி வெடித்தபோது ஏற்பட்டதைப் போல, உலகளவில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையக் காரணமாக இருக்கலாம்.
வீழ்ச்சியை எதிர்கொள்ளும்
இது சர்வதேச நாணய நிதியம் மற்றும் இங்கிலாந்து வங்கி இரண்டின் முதன்மை நிர்வாகிகளால் எழுப்பப்பட்ட ஒரு கவலையாகும். உண்மையில், பாங்க் ஆஃப் அமெரிக்காவின் சமீபத்திய உலகளாவிய நிதி மேலாளர் கணக்கெடுப்பு, AI பங்குகள் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் தருவாயில் இருப்பதாக முதலீட்டு மேலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நம்புகிறார்கள் என்பதைப் பதிவு செய்துள்ளது.
இருப்பினும் AI தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகள் அதிகரித்த நிலையிலேயே உள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான என்விடியாவின் விற்பனை 57 பில்லியன் டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே நேரத்துடன் ஒப்பிடுகையில் 62 சதவீதம் அதிகம். இந்த நிலையில், 2008 உலக நிதி நெருக்கடியை துல்லியமாக கணித்து பல பில்லியன் டொலர் சம்பாதித்த Michael Burry என்பவர் இறுதியாக தோல்வியை ஒப்புக்கொண்டு, Nvidia மற்றும் அமெரிக்க மென்பொருள் நிறுவனமான பலந்திர் டெக்னாலஜிஸின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை என உறுதி செய்துள்ளார்.
AI பங்குகள் லாபம் அளிக்கலாம், ஆனால் அது நீண்டகாலத்திற்கு உத்தரவாதமளிக்காது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |