பிரான்ஸ் பள்ளி தாக்குதலுக்கும் இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சினைக்கும் தொடர்பு: அமைச்சர் தகவல்
பிரான்ஸ் பள்ளி ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார், மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர்
பள்ளியில் தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பெயர் முகம்மது (Mohamed M) என்றும் செசன்ய வம்சாவளியினரான அவர் ரஷ்யாவில் பிறந்தவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் பள்ளி தாக்குதலுக்கும் இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சினைக்கும் தொடர்பு
இந்நிலையில், இந்த தாக்குதலுக்கும் இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடத்தில், கொல்லப்பட்ட ஆசிரியருக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் அஞ்சலி செலுத்தினார்.
கொல்லப்பட்ட ஆசிரியரின் பெயர் Dominique Bernard என்றும், அவர் பிரெஞ்சு மொழி கற்பித்துவந்தவர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தாக்குதலுக்குள்ளான மற்றொரு ஆசிரியர், பள்ளியின் பாதுகாவலர் ஒருவர் மற்றும் சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் ஆகியோர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், இந்த தாக்குதலில் மாணவ மாணவியரில் யாரும் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.