பாரிஸ் ஈபிள் டவர் சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: சிறையிலிருந்து வெளியேறிய கைதி சொன்ன காரணம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த திடீர் கத்திக் குத்து தாக்குதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஆதரவு போராட்டங்கள்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கிய ஆரம்பம் முதலே பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் போரை மையப்படுத்திய தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பாலஸ்தீன் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவான மக்கள் பாரிஸ் நகர சாலையில் இறங்கி பாலஸ்தீன கொடியுடன் கோஷங்களை எழுப்பினர்.
அதே சமயம் இஸ்ரேலிய ஆதரவு மக்களும் ஹமாஸின் தாக்குதல் மற்றும் பிணைக் கைதிகள் சிறைப்பிடிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்களை பாரிஸ் நகரில் நிகழ்த்தினர்.
சில சமயங்களில் இரண்டு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு விடும் என்ற மோசமான சூழ்நிலையில், ஆயிரக்கணக்கான பொலிஸார்கள் பாரிஸ் நகர சாலையில் குவிக்கப்பட்டு போராட்டங்கள் களைக்கப்பட்டது.
கத்திக்குத்து
இந்நிலையில் பிரான்ஸின் பாரிஸ் நகர ஈபிள் டவர் அருகே உள்ள சாலையில் இன்று நடந்த திடீர் கத்திக்குத்து தாக்குதலில் 1 கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை பார்த்த சாட்சி ஒருவர் அளித்த தகவலில், தாக்குதல்தாரி “Allahu Ahkbar” என கோஷமிட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் சாலையில் சென்ற பொதுமக்களை சீரற்ற முறையில் குத்தி காயப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்ட நபர் 2016ம் ஆண்டில் பொதுமக்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று சிறையில் அடைக்கப்பட்ட அர்மண்ட் ரஜப்பூர்-மியான்டோப்(Armand Rajabpour-Miyandoab) என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் 2020ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தாக்குதலுக்கான காரணத்தை பொலிஸாரிடம் ரஜப்பூர்-மியான்டோப் தெரிவித்துள்ளார்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) December 2, 2023
Arman Rajabpour-Miyandoab, who killed 1 & 2 people in a stabbing attack in Paris tonight had earlier been in contact with Abdoullakh Anzorov
Anzorov is the Islamist terrorist who beheaded the French teacher Samuel Paty for showing Muhammad cartoons in class in 2020. pic.twitter.com/9zNjrTQhHA
அதில் அரேபியர்கள் கொல்லப்படுவதை தன்னால் தாங்கி கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் முதன்மை பாதுகாப்பான “அயர்ன் டோமில்” செயல்பாட்டு குளறுபடி: டெல் அவிவ் நகரை தாக்கிய ஏவுகணைகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |