2021-ல் 1 மில்லியன் Tesla கார்கள் விற்பனை!
எலான் மஸ்கின் Tesla நிறுவனம் கடந்த ஆண்டு (2021) கிட்டத்தட்ட 1 மில்லியன் கார்களை விற்பனை செய்துள்ளது.
எலான் மஸ்க் நிர்வகிக்கும் Tesla நிறுவனம் அதன் டெலிவரிகளை சுமார் 50 சதவீதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கடந்த ஆண்டு கூறியிருந்தது.
ஆனால், Tesla நிறுவனம் அதன் இலக்கை மிஞ்சி, 2021-ஆம் ஆண்டில் மொத்தம் 936,000 கார்களை விற்றது.
இது முந்தைய ஆண்டு (2020) விற்பனை செய்தததைவிட 87 விழுக்காடு அதிகமாகும்.
2021-ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் (Q4) மட்டும் Tesla 308,600 கார்களை விற்றது. அதேபோல், மூன்றாம் காலாண்டில் (Q3) 241,300 கார்கள் விற்கப்பட்டன.
கடந்த அக்டோபர் மாதத்தில் கார் வாடகை நிறுவனமான Hertz நிறுவனம் மட்டும் Tesla நிறுவனத்திடமிருந்து 100,000 மின்சார வாகனங்களை வாங்கியது.
இந்நிலையில், Tesla கார்களின் விற்பனை மிகப்பாரிய அளவில் உயர்வுகண்டது.
கடந்த ஆண்டு டெலிவரிகளில், 11,750 கார்கள் Model S மற்றும் X ரக கார்களும், 296,850 கார்கள் Model 3 மற்றும் Y ரக கார்களும் அடங்கும்.
மொத்தம் 936,172 டெலிவரிகளில், Model 3 மற்றும் Y ஆகிய இரண்டு ரக கார்களும் அதிக விற்பனை ஆக்கியுள்ளன.