9 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்லாவால் தடுமாறிய எலோன் மஸ்க்
எலோன் மஸ்கின் டெஸ்லா மின்சார வாகனங்களின் உலகளாவிய விற்பனை 2024ம் ஆண்டில் 1.1 சதவிகிதம் சரிவடைந்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
உலகளாவிய விற்பனை
கடந்த 2015க்கு பின்னர், டெஸ்லாவின் விற்பனையில் முதல் முறையாக சரிவு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. உண்மையில், இந்த ஆண்டின் மந்தமான தொடக்கத்திற்குப் பிறகு, நான்காவது காலாண்டில் மின்சார வாகனங்களின் உலகளாவிய விற்பனை 2.3 சதவீதம் உயர்ந்திருந்தது.
ஆனால் 0 சதவீத நிதியுதவி, இலவச கட்டணம் மற்றும் குறைந்த விலை குத்தகை போன்ற சலுகைகள் இருந்தபோதிலும் டெஸ்லா நிறுவனத்தில் வருடாந்திர சரிவு பதிவாகியுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை 495,570 வாகனங்களை டெஸ்லா டெலிவரி செய்துள்ளது, அத்துடன் முழு ஆண்டுக்கான டெலிவரிகளை 1.79 மில்லியனாகவும் உயர்த்தியுள்ளது. ஆனால் அது 2023 விற்பனையான 1.81 மில்லியனை விடவும் 1.1 சதவீதம் குறைவாக இருந்தது.
அதாவது அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் மின்சார வாகனங்களுக்கான ஒட்டுமொத்த தேவை குறைந்துள்ளது என்றே இதில் இருந்து தெரிய வருகிறது. ஃபேக்ட்செட் நடத்திய ஆய்வு ஒன்றில், டெஸ்லாவின் சராசரி விற்பனை விலை காலாண்டில் 41,000 அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.
3 சதவீதம் சரிந்தன
டெஸ்லாவின் நான்காம் காலாண்டு வருவாய்க்கு இது நல்லதல்ல என்றே கூறபப்டுகிறது. ஜனவரி 29 அன்று நான்காம் காலாண்டு வருவாய் தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் என்று டெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 2022ல், டெஸ்லா அதன் விற்பனையானது பெரும்பாலான ஆண்டுகளில் 50 சதவிகிதம் வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது, ஆனால் கணிப்பு பொய்த்துப்போயுள்ளதுடன் சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் போட்டியும் அதிகரித்துள்ளது.
வியாழக்கிழமை பங்குச்சந்தை தொடக்க நேரத்தில் டெஸ்லா பங்குகள் 3 சதவீதம் சரிந்தன, ஆனால் கடந்த 12 மாதங்களில் டெஸ்லா பங்குகள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |