பிரித்தானியாவில் வீடுகளுக்கு மின்சார விநியோகம் செய்ய உள்ள டெஸ்லா
பிரித்தானியாவில் மின்சார விநியோகம் செய்ய உரிமம் கோரி டெஸ்லா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
டெஸ்லா மின்விநியோகம்
அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம், மின்சார கார் உற்பத்தி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மேலும், சூரிய சக்தி மின்சாரம் மற்றும் வீட்டு பேட்டரி சேமிப்பு வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு முதல் டெக்ஸாஸில் மின்சார விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் உள்ள வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மின்சார விநியோகம் செய்ய டெஸ்லா ஆர்வம் காட்டி வருகிறது.
கடந்த மாத இறுதியில், பிரித்தானியாவின் எரிசக்தி ஒழுங்குமுறை நிறுவனமான Ofgem மிடம் மின் விநியோக உரிமம் வழங்க கோரி விண்ணப்பித்துள்ளது.
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்ய, Ofgem 9 மாதங்கள் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
டெஸ்லா எனர்ஜி நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டால், அடுத்த ஆண்டு முதல், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் டெஸ்லா நிறுவனம் மின்விநியோகம் வழங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |