வாகனம் ஓட்டும் போது கழன்று விழுந்த காரின் ஸ்டீயரிங் வீல்: உரிமையாளர் பகிர்ந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ!
அமெரிக்காவில் டெஸ்லா காரை ஓட்டிச் செல்லும் போது ஸ்டீயரிங் வீல் கழன்று விழுந்த காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த உரிமையாளர், இச்சம்பவத்தால் டெஸ்லா காரின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கழன்று விழுந்த ஸ்டீயரிங்
அமெரிக்க நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம்,டெஸ்லா மாடல் Y SUV கார்களின் ஸ்டீயரிங் வீல் ஓட்டும் போது விழுந்ததாகத் தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
2023 டெஸ்லா மாடலான Y SUV வாகனங்களில் ஸ்டீயரிங் நெடுவரிசையிலிருந்து ஸ்டீயரிங் பிரிந்து விழுந்த இரண்டு தனித்தனி சம்பவங்கள் பற்றி அறிந்திருப்பதாகத் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வாகனம் ஓட்டும் போது தங்களின் புதிய டெஸ்லா மாடல் Y இன் ஸ்டீயரிங் கீழே விழுந்ததை ஆவணப்படுத்திய ஒரு நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
@elonmusk @TeslaOwnersWW @BLKMDL3 Family was excited to receive Tesla Y delivery on 1/24/2023. Was driving on highway and all the sudden steering wheel fall off, was lucky enough there was no car behind and I was able to pull on devider #SafetyFirst #Fixit #TeslaModelY #help pic.twitter.com/4UMokFA2cv
— Prerak & Neha Patel (@preneh24) January 30, 2023
இந்த வீடியோ புகாரை டெஸ்லா நிறுவனம் ஏற்றுக்கொண்டு வாகன உரிமையாளரிடம் குறைபாட்டைச் சரிசெய்ய $103.96 செலவாகும் என கூறியுள்ளது. பின்பு அதனை தள்ளுபடி செய்து புதிய மாடல் காரை வழங்கியுள்ளது.
இந்த சம்பவம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) இன் விசாரணையைத் தூண்ட காரணமாக அமைந்துள்ளது.
தொடரும் புகார்கள்
டெஸ்லா மின்சார கார்களில் போல்ட்கள் சரியாகப் பொருத்தப்படவில்லை எனக்கூறி, இதனால் விபத்தின் போது பயணிப்பவர்களுக்கு அதிக காயம் ஏற்பட வாய்ப்புள்ளதெனக் கூறியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக டெஸ்லா நிறுவனம் ஆயிரக்கணக்கான Y- EV மாடல்களை திரும்ப பெற்றுள்ளது.
@twitter
டெஸ்லா EV மாடல்களில் ஸ்டீயரிங் வீல்கள் கழன்று விழுவதாகப் புகார் வருவது முதல் முறை அல்ல. ஆனால் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்கள் திரும்ப அழைக்கப்படவில்லை.
இது பற்றிப் பேசிய NHTSA தலைமை அதிகாரி டெஸ்லா விசாரணையில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தோடு (NHTSA) ஒத்துழைக்க வேண்டும், மேலும் தேவையான திருத்தங்கள் அல்லது வாகனத்தைத் திரும்பப்பெறுதல்கள் பற்றிய விவரங்கள் ஆணையத்தால் பிறகு முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.