5 லட்சம் கார்களை திரும்பபப் பெரும் Tesla! ஏன் தெரியுமா?
எலான் மஸ்க்கின் Tesla நிறுவனம் கிட்டத்தட்ட அரை மில்லியன் Model 3 மற்றும் Model S கார்களை திரும்பப் பெறுகிறது.
2017 மற்றும் 2020-க்கு இடையில் தயாரிக்கப்பட்ட Tesla கார்களில் ரியர்வியூ கமெராவில் சிக்கல் இருப்பதால், சுமார் 356,309 Model 3 கார்கள் நிறுவனத்தால் திரும்பப் பெறுகிறது.
அதேபோல், முன்புற டிரங்க் பிரச்சனைகள் காரணமாக 119,009 Model S கார்களையும் Tesla நிறுவனம் திரும்பப் பெறுகிறது.
Tesla-வின் கூற்றுப்படி, Model 3 கார்களில் ஒரு சதவீதம் மட்டுமே குறைபாடு உள்ளது, அதே நேரத்தில் Model S வாகனங்களில் 14 சதவீதம் குறைபாடு உள்ளது.
குறிப்பிட்ட Tesla Model 3 வாகனங்களில், டிரங்கைத் திறந்து மூடுவது, ரியர்வியூ கமெராவை இணைக்கும் கேபிள் சேனலை சேதப்படுத்தும், இதனால் கேமரா திடீரென செயலிழந்துவிடும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் குறிப்பிட்ட Tesla Model S கார்களில் முன் ட்ரங்க் தாழ்ப்பாள்கள் இயங்குவதை நிறுத்தலாம், இது வாகனம் இயக்கத்தில் இருக்கும் போது அது மேலே செல்ல அனுமதிக்கிறது. இந்த காரணங்களுக்காகவே இந்த கார்கள் திரும்பப் பெறப்படுகின்றன.
பழுதடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் பிப்ரவரியில் இருந்து டெஸ்லாவிடமிருந்து அறிவிப்பைப் பெற உள்ளனர்.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தின் நிலையைச் சரிபார்க்க டெஸ்லாவின் வாடிக்கையாளர் சேவையையும் அழைக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் (NHTSA) கிட்டத்தட்ட 600,000 டெஸ்லா வாகனங்கள் மீது முறையான விசாரணையைத் தொடங்கிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓரிகான் டெஸ்லா டிரைவர் வின்ஸ் பாட்டன் கடந்த மாதம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்திடம் (NHTSA) புகார் அளித்ததை அடுத்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.