நான்கு மாதங்களில் வெறும்... இந்தியாவில் சறுக்கும் டெஸ்லா விற்பனை
இந்தியாவில் இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, எலோன் மஸ்க்கின் மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா விற்பனையில் சறுக்கி வருகிறது.
டெஸ்லா மட்டும்
நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட அறிமுகமாக இருந்தபோதிலும், டெஸ்லா நிறுவனம் இதுவரை 100 க்கும் மேற்பட்ட கார்களை மட்டுமே விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மட்டுமின்றி, BMW, BYD மற்றும் Mercedes-Benz போன்ற நிறுவனங்களிலிருந்து பிரீமியம் பிரிவில் அதன் போட்டி மொடல்கள் வலுவான விற்பனையைப் பதிவு செய்துள்ள நேரத்தில், எலோன் மஸ்க்கின் டெஸ்லா மட்டும் சரிவை எதிர்கொண்டுள்ளது.
பண்டிகை காலம் மற்றும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காரணமாக வரி குறைப்புக்கள் இருந்தபோதிலும் விற்பனை ஏன் அதிகரிக்கவில்லை என்பது குறித்து ஆட்டோமொபைல் துறை வல்லுநர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
வெளியான தகவல்களின் அடிப்படையில், செப்டம்பர் நடுப்பகுதி வரை டெஸ்லா நிறுவனம் வெறும் 600க்கும் மேற்பட்ட கார்களுக்கு மட்டுமே முன்பதிவுகளைப் பெற்றது. இருப்பினும், முன்பதிவுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே உண்மையான விற்பனையாக மாற்றப்பட்டது.

3 சதவீதத்திற்கும் குறைவாக
மேலும், டெஸ்லா கார்களுக்கு மிக அதிகமான ஆரம்ப விலையும் மற்றொரு சவாலாக உள்ளது. இந்த நிலையில் டெஸ்லா கார் வாங்குபவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு எரிபொருள் மற்றும் பராமரிப்புக்காக ரூ.20 லட்சம் வரை திரும்பப் பெறலாம் என டெஸ்லாவின் இந்தியத் தலைவரான ஷரத் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது இந்தியாவில் விற்கப்படும் அதன் மாடல் Y விலையில் மூன்றில் ஒரு பங்கு என்றே கூறபப்டுகிறது. இந்தியாவில் மின்சார வாகன சந்தை இன்னும் சிறியதாகவே உள்ளது, பயணிகள் வாகன விற்பனையில் அது 3 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
மட்டுமின்றி, நாடு முழுவதும் சுமார் 25,000 சார்ஜிங் நிலையங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், டெஸ்லா கார்களை வீட்டிலேயே சார்ஜிங் செய்துகொள்ளலாம். மணிக்கு 70 கிமீ தூரம் வரை பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |