இந்தியாவில் முதல் ஷோரூமை திறந்த டெஸ்லா - காரின் விலை தெரியுமா?
டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்துள்ளது.
மும்பையில் டெஸ்லா ஷோரூம்
உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் தனது விற்பனையை தொடங்க உள்ளது.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை, பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC), 4000 சதுரடியில் இன்று திறந்துள்ளது. இந்த ஷோரூமின் மாத வாடகை ரூ.29 லட்சம் என கூறப்படுகிறது.
திறப்பு விழாவில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கலந்துகொண்டு, ஷோரூமை திறந்து வைத்தார்.
Maharashtra welcomes Tesla !
— CMO Maharashtra (@CMOMaharashtra) July 15, 2025
🔸Inauguration of India's first 'Tesla Experience Centre' at the hands of the CM Devendra Fadnavis. Senior Regional Director Isabel Fan presented the CM with a brief on Tesla's vision and key planned innovations for India.
🔸मुख्यमंत्री देवेंद्र… pic.twitter.com/Tk0Z59UPcJ
டெஸ்லா தனது பிரபலமான ஒய் மாடல்களை முதற்கட்டமாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. திறப்பு விழாவிற்காக சீனாவில் இருந்து, மும்பைக்கு 6 மாடல் Y SUV-கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் டெஸ்லா கார் விலை
இந்தியாவில், மாடல் ஒய் காரின் அடிப்படை மாடலான ரியர்-வீல் டிரைவ் மாடல் ரூ.59.89 லட்சமாகவும், மாடல் ஒய் லாங்-ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ் வேரியண்டின் விலை ரூ.68 லட்சமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரூ.38.6 லட்சம் மற்றும் சீனாவில் ரூ.31.5 லட்சதிற்கு இந்த கார்கள் விற்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் அதைவிட 2 மடங்கு விலை நிர்ணையிக்கப்பட்டுளது.
Model Y
— Tesla India (@Tesla_India) July 15, 2025
Maximum efficiency. Smoother rides. All-new interior.
New on the outside:
- Redesigned exterior with improved aerodynamics to unlock better range, performance & longevity
- Updated wheels, tires & brakes + retuned suspension for a smoother ride
- Our single,… pic.twitter.com/10jozn8nKj
முழுமையாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, இந்தியாவில் 100% சதவீதம் இறக்குமதி வரி விதிப்பதே இந்த விலை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்தியாவில், உற்பத்தி ஆலை தொடங்குவது குறித்து டெஸ்லா எந்தவித உத்திரவாதமும் வழங்கவில்லை. இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான டெஸ்லா கார், சீனாவின் ஷாங்காயில் ஜிகா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |