இந்தியாவில் வெளியாகும் முன்பே Tesla வாங்கிய பிரபலங்கள்: அம்பானி முதல் ரிதேஷ் தேஷ்முக் வரை...
மும்பை BKC-யில் தனது முதலாவது ஷோரூமுடன் டெஸ்லா இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வோடு, Model Y SUV இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது, அதன் ஆரம்ப விலை ரூ.59.89 லட்சம் (Ex-showroom) என் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் டெஸ்லா அதிகாரப்பூர்வமாக வருவதற்கு முன்னே, இந்தியாவில் பலர் ஏற்கனவே இந்த பிரபல எலக்ட்ரிக் காரை கொண்டுள்ளனர்.
அந்தப் பிரபலங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்...
பிரஷாந்த் ரூயா (Prashant Ruia)
Essar Group இயக்குனர் பிரஷாந்த் ரூயா, இந்தியாவில் டெஸ்லா கார் வாங்கிய முதலாவது நபராக அறியப்படுகிறார்.
இவர் Tesla Model X Plaid வேரியண்டை வைத்துள்ளார். இது உலகின் வேகமான எலக்ட்ரிக் SUV-யாக கருதப்படுகிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 540 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது.
முகேஷ் அம்பானி (Mukesh Ambani)
ஆசியாவின் மிகப்பாரிய செல்வந்தராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கு, 160-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.
இதில் 2019இல் வாங்கிய Tesla Model S முக்கியமானது. இந்த மொடல் 400 ஹார்ஸ்பவருக்கும் மேற்பட்ட சக்தி, 660 Nm டார்க் வழங்குகிறது. 0-100 Km/hr வேகத்தை 4.3 விநாடிகளில் எட்டக்கூடிய திறன் கொண்டது.
ரிதேஷ் தேஷ்முக் (Riteish Deshmukh)
பாலிவுட்டில் டெஸ்லா வைத்துள்ள ஒரே நடிகர் ரிதேஷ் தேஷ்முக். இவரது மனைவி அவருக்கு Tesla Model X பரிசாக வழங்கியுள்ளார்.
இது 7 இருக்கைகள் கொண்ட Falcon Wing door-களுடன் வரும் சிவப்பு நிற மொடல். மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 3.2 விநாடிகளில் அடையும் திறன் கொண்டது.
பூஜா பத்ரா (Pooja Batra)
முன்னாள் Miss India Pacific மற்றும் நடிகையான பூஜா பத்ரா, பெரும்பாலும் அமெரிக்காவில் வாழ்கிறார்.
அமெரிக்காவில் Tesla Model 3 கார் வைத்துள்ளார். இந்த மொடல் டெஸ்லாவின் குறைந்த விலை மொடலாக இருப்பினும், அதன் பிரிமியம் அம்சங்கள் கவர்ச்சிகரமானவை.
இதுவே இந்தியாவில் முதலாவது அறிமுகமாகும் மொடலாக எதிர்பார்க்கப்பட்டது.
இந்த தகவல்கள் மூலம், டெஸ்லா இந்தியாவில் எவ்வளவு எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்னரே, இந்தியாவில் டெஸ்லா வாங்க தயாராக இருந்துள்ளனர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Tesla India celebrity owners, Mukesh Ambani Tesla car, Riteish Deshmukh Tesla Model X, Tesla showroom Mumbai, Tesla Model Y India launch, Tesla Model S, X, 3 in India, Indian celebrities electric cars