இந்தியாவுக்கு வரும் டெஸ்லா! உள்நாட்டில் தொழிற்சாலையை அமைக்க பேச்சுவார்த்தை
இந்தியாவில் புதிய EV ஆலையை திறக்க டெஸ்லா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கு வரும் டெஸ்லா
உள்நாட்டில் விற்பனை மற்றும் ஏற்றுமதிக்காக மின்சார கார்களை உருவாக்க டெஸ்லா இன்க் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை அமைக்க முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லாவின் மூத்த நிர்வாகிகள் இந்த வாரம் இந்தியாவில் உதிரிபாகங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அரசாங்க அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ET-Agencies
இந்நிலையில், இந்த விடயம் குறித்து நன்கு அறிந்த அனாமதேய நபர் ஒருவர் வெளியிட்ட தகவல்களின்படி, மூத்த டெஸ்லா நிர்வாடுகள் குழு புதன் மற்றும் வியாழன் அன்று இந்தியா வருகிறது. இந்தக் குழுவில் டெஸ்லாவின் சப்ளை செயின் ஆஸ்டினின் மூத்த நிர்வாகிகளும் அடங்குவர். இந்த நிர்வாகிகள் இந்தியாவில் உள்ள மூத்த அரசு அதிகாரிகளுடன் உரையாடுவார்கள். இதில், இந்தியாவில் டெஸ்லாவின் விநியோகச் சங்கிலியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை
அறிக்கையின்படி, டெஸ்லா நிர்வாகிகள் குழு அதன் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்க அழுத்தம் கொடுக்கும். இந்தக் குழு பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலக அதிகாரிகளையும் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Photo by Spencer Platt/Getty Images
இந்த சந்திப்பில், டெஸ்லாவின் கார் மாடல்களுக்கான உள்ளூர் ஆதாரங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதம் நடைபெறும் என ஆதாரங்கள் தெறிவிக்கின்றன.